"ஜியோவை" விட சூப்பர் சலுகையுடன் "பதஞ்சலி"...தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் "புது சிம்கார்டு"..!

 
Published : May 30, 2018, 12:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
"ஜியோவை" விட சூப்பர் சலுகையுடன் "பதஞ்சலி"...தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் "புது சிம்கார்டு"..!

சுருக்கம்

pathajalai started to distribute new simcard

பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து, பதஞ்சலி நிறுவனம் இந்திய டெலிகாம்  சந்தையில் புதிய சிம் கார்டுகளை வெளியிட்டு உள்ளது

அதில் ரூ.144, ரூ.792 மற்றும் ரூ.1,584 என மூன்றில் ஒரு சலுகையை தேர்வு செய்ய வேண்டும். 

மேற்குறிப்பிட்ட இந்த மூன்று திட்டதிலுமே தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் மேலும் பல சலுகைகளை வழங்க திட்டமிட்டு உள்ளது   பதஞ்சலி நிறுவனம்.

முதற்கட்டமாக  இந்த சிம் கார்டுகளை, பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு  வழங்கப்பட்டு, எவ்வாறு செயல்படுகிறது என்பதை சோதனை செய்த பின்னர்,   வாடிக்கையாளர்களுக்கு  விற்க முன் வர உள்ளது.

ரூ.144 திட்டம்

ஸ்வதேசி சம்ரிதி என அழைக்கப் படும் இந்த  சிம்  கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு, பதஞ்சலி பொருட்களை வாங்கும் போது, 10% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம தெரிவித்து உள்ளது.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 

2 ஜிபி டேட்டா

ஸ்எம்எஸ் இலவசம்

கால அவகாசம் : 30 நாட்களுக்கு முற்றிலும் ப்ரீ

ரூ.792 மற்றும் ரூ.1584 சலுகைகளிலும் இதேபோன்ற சலுகைகள் முறையே 180 மற்றும் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜியோ வருகையால், போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம்  திவாலானது.இந்நிலையில் கடும் போட்டிகளுக்கு நடுவே வோடபோன் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க சில சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

இந்த தருணத்தில், பதஞ்சலி நிறுவனமும் சிம் கார்டுகளை வழங்க திட்டமிட்டு உள்ளது. அதுவும் ஜியோ உடன் போட்டிபோடும் அளவிற்கு குறைந்த விலையில் அதிக  சலுகையை வழங்க உள்ளதால் ஆரம்ப கட்டத்தில் ஜியோவிற்கு கிடைத்த வரவேற்பு  போன்றே இதற்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Best Oils for Winter : குளிர்காலத்தில் சிறந்த 'சமையல் எண்ணெய்' எது தெரியுமா? இதை தவறாம பாலோ பண்ணுங்க
Teeth Stain : பற்களை மோசமாக்கும் கறைக்கு இந்த '5' தினசரி பழக்கங்கள் தான் காரணம்! உடனே நிறுத்துங்க