
அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சேர்ந்தவர் டால்மேட்ச் எலியா. 38 வயதாகும் இவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவர் தன்னுடைய படுக்கை அறையில் இருந்தபடியே, பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இ - சிகரெட்டை புகைத்துள்ளர். அப்போது எதிர்பாராத விதமாக இந்த சிகரெட் வெடித்துள்ளது.
இதில் இவருடைய படுக்கை அரை தீ பிடித்தது. மேலும் இவருடைய உடல் முழுவதும் தீ பரவியது. இவருடைய வீட்டில் இருந்து அதிக புகை வந்ததை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது எலியா உடல் கருகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில். இ - சிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூறிய பகுதி எலியாவின் மண்டை ஓட்டுக்குள் பாய்ந்திருந்தது தெரிய வந்தது.
எனவே, இவர் இ-சிகரெட் புகைக்கும் போது அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப்பிடித்து அவர் உயிரிழந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுவரை அமெரிக்காவில் 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரை 195 இ-சிகரெட் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும். அதில் 133 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஆனால் இது தான் முதல் உயிரிழப்பு சம்பவம் என்று தெரிவித்துள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.