Parenting Tips : பெற்றோர்களே... உங்கள் குழந்தை ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்த சூப்பரான ஐடியாக்கள் இதோ!!

By Kalai SelviFirst Published Mar 15, 2024, 3:49 PM IST
Highlights

பெற்றோர்களே நீங்களுக்கு உங்கள் குழந்தைகளை நொறுக்குத் தீனிகளில் இருந்து விலக்கி வைக்கப் போராடுகிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது...

ஜங்க் ஃபுட்களில் இருந்து குழந்தைகளை விலக்கி வைப்பது பெற்றோருக்கு ஒரு பெரிய சவால் என்றே சொல்லலாம்.. என்ன தான் பலவழிகளில் முயற்சி செய்தாலும் குழந்தைகள் இந்த மோசமான உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தவில்லை. குழந்தைகள் ஜங்க் ஃபுட்களை அதிகமாக சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், இதய நோய்கள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இருந்தபோதிலும், முதலில் குழந்தைகளில் உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவது அவசியம். இப்போது அதுகுறித்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

குழந்தைகளுக்கு உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது?
பீட்சா, பர்கர், உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது சாக்லேட் குக்கீகள் குழந்தைகளின் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகும். இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். வேகமான வாழ்க்கை முறையில் காணப்படும் இத்தகைய குப்பை உணவுகள் குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதனால் குழந்தைகள் இளம் வயதிலேயே பருமனாக மாறுகிறார்கள். இத்தகைய உடல் பருமனை குறைக்க, குழந்தைகளை நொறுக்குத் தீனிகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதற்கு 5 சூத்திரங்களைப் பின்பற்றினால் குழந்தைகளை ஜங்க் ஃபுட்களில் இருந்து கண்டிப்பாக விலக்கி வைக்கலாம். அவை..

ஆரோக்கியமான உணவு: குழந்தைகள் எப்போதும் தங்கள் பெற்றோரைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் உணவை சரியாக கடைபிடிக்க ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். அதனால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். பெற்றோர்கள் நொறுக்குத் தீனி மற்றும் எதையாவது சாப்பிட்டால், குழந்தைகளால் அதை சாப்பிடுவதைத் தடுக்க முடியாது.

இதையும் படிங்க:  Exam Time-ல குழந்தைக்கு என்ன மாதியான உணவுகளை கொடுக்கலாம்..? உங்களுக்கான சில யோசனைகள் இதோ!

நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும்: பெற்றோர்கள் வீட்டிற்கு கொண்டு வந்தால் தான் குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவார்கள். ஆக, ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள், சர்க்கரை பானங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். அதுபோல், உங்கள் குளிர்சாதன பெட்டியில் ஆரோக்கியமான உணவை நிரப்புங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்புகள் மற்றும் குளிர்பானங்களை வாங்குவதைக் குறைக்கவும்.

குழந்தைகளை மகிழ்ச்சியாக சாப்பிட விடுங்கள்: சமையல் தயாரிப்பு மற்றும் திட்டமிடலில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். குழந்தைகளை கடைக்கு அழைத்துச் சென்று பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க பழக்குங்கள். குழந்தைகள் தாங்களாகவே சமையலில் ஈடுபட்டால், அவர்கள் மகிழ்ந்து சாப்பிடுவார்கள்.

இதையும் படிங்க: உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கிறார்கள் என்று கவலையா..? இந்த சூப்பர்ஃபுட்களைக் கொடுங்க...

விளையாட அனுமதிக்கவும்: இன்று பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, தங்கள் குழந்தைகளை உடல் உழைப்பிலிருந்து விலக்கி வைப்பது. குழந்தைகள் வெளியில் சென்று பல்வேறு வகையான விளையாட்டுகளில் பங்கேற்கட்டும். இது உடலின் கலோரிகளை எரிப்பது மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான பழக்கங்களையும் உருவாக்குகிறது.

டிவி, மொபைல் பார்ப்பதைக் குறைக்கவும்: குழந்தைகள் அதிகமாக டி.வி மற்றும் மொபைல் போன்களைப் பார்த்தால், அது ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே குழந்தைகள் டி.வி., மொபைல் பார்ப்பதை குறைக்கவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!