Parenting Tips For Single Child : ஒரு குழந்தையை வளர்க்கும் போது ஒவ்வொரு பெற்றோரும் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்பதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் காலங்கள் மாற மாற பல விஷயங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் குழந்தைகளை வளர்க்கும் விதம். ஆம், முன்பெல்லாம் குழந்தைகளை வளர்த்த விதத்திற்கும், தற்போது வளர்க்கப்படும் விதத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பரபரப்பான வாழ்க்கை முறை, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம்,அதிகரித்து வரும் வேலை அழுத்தம் போன்ற பல காரணங்களால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தான் சரியாக நேரத்தை செலவிட முடிவதில்லை.
குழந்தைகளை பெற்றெடுத்தால் மட்டும் போதாது, அவர்களை வளக்கும் போது அவர்களுக்கு நேரம் கொடுப்பது, அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மிக மிக அவசியம். ஆனால், பல பெற்றோர்கள் இதை மறந்து விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக பெற்றோருக்கு ஒரே பிள்ளையாக இருக்கும் குழந்தையின் நிலைமை ரொம்பவே பரிதாபம் தான். ஏனெனில், இப்படிப்பட்ட குழந்தைகள் தனிமையில் வாழ்ந்து பல மன மற்றும் உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த மாதிரியான குழந்தைகளை வளர்ப்பதில் சரியான கவனம் செலுத்தாததால், அவர்கள் தனிமைக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, இன்றைய கட்டுரைகள் நாம் ஒற்றை குழந்தையை வளர்ப்பது தொடர்பான பெற்றோருக்கான சில குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: Parenting Tips : உங்க குழந்தைக்கு முடி நரைக்குதா ..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!
ஒற்றைக் குழந்தையின் பெற்றோருக்குரிய குறிப்புகள்:
ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அவர்களுக்கு போதுமான நேரத்தை செலவழிக்க வேண்டும். இது செய்யவில்லை என்றால் குழந்தை தனிமையில் தான் இருக்க வேண்டும். ஒரு குழந்தை தனிமையில் இருந்தால் அது அவர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இவர்களிடம் பிடிவாத குணமும் அதிகமாகவே இருக்கும். எனவே, ஒரு குழந்தையை பெற்றெடுத்த பெற்றோர்கள், அவர்களை வளர்க்கும் போது இந்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அவை..
இதையும் படிங்க: Kids Snacks : குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஈவினிங் ஸ்நாக்ஸ் கொடுங்க.. ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது..
1. பிறர் உதவியை பெறுங்கள்:
ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் பெற்றோர்கள், வேலைக்கு செல்லும் நிலை இருந்தால், அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியை பெறலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தை தனிமையில் இருந்து காப்பாற்றப்படும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
2. நண்பர்களே உருவாக்கவும்:
நீங்கள் ஒரு குழந்தையை வளர்கிறீர்கள் என்றால், உங்கள் குழந்தைக்கு நண்பர்களை உருவாக்க உதவுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தை ஒருபோதும் தனியாகவே இருக்காது. உங்களுக்கு நேரம் இல்லாத சமயத்தில் குழந்தை தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிடும். இருப்பினும் நண்பர்கள் உருவாக்கும் போது நல்லவர்கள் மற்றும் கெட்டவர்களை அடையாளம் காண நிச்சயம் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க மறக்காதீர்கள்.
3. குழந்தையிடம் நட்பாக இருங்கள்:
எப்போதும் வேளையில் பிஸியாக இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் நல்ல பிணைப்பு இல்லை என்றால், அந்த குழந்தை கெட்ட பழக்கங்களை சுலபமாக கற்றுக் கொள்ளும். எனவே, நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நட்பாக இருங்கள். இதனால் அவர்கள் தனிமையை ஒருபோதும் உணர மாட்டார். மேலும், இதை செய்வதன் மூலம் உங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறை எதிர்மறையான தாக்கம் ஏற்படாது.
4. தினசரி வழக்கத்தை உருவாக்குங்கள்:
ஒரு குழந்தையை வளர்க்கும் போது பெற்றோர்களாகிய நீங்கள் தினசரி வழக்கத்தை உருவாக்குங்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் ஒரு முறையான முறையில் விஷயங்களை நிர்வகிக்க முடியும். இது நேரத்தை கண்காணிக்கவும், உங்கள் குழந்தைக்கு நேரத்தை கொடுக்கவும் பெரிதும் உதவும்.
5. சுதந்திரம் அவசியம்:
குழந்தை தனது விருப்பப்படி செயல்பட சுதந்திரம் கொடுங்கள். எல்லா நேரமும் அவர்களை சுற்றி இருப்பது, அவர்களது ஒவ்வொரு விஷயங்களும் குறிப்பிடுவது நல்லதல்ல. ஒரு குழந்தை தனிப்பட்ட இடத்தை பெறும் போது அவரது படைப்பாற்றல் மேம்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
6. விருப்பத்தை திணிக்காதீர்கள்:
உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ற அவர்களை அனுமதியுங்கள். உங்களது, விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். அது அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் அவர்களது ஆளுமையும் பாதிக்கப்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D