தன் பெயரை “ஐ போன் செவன்” என  மாற்றிகொண்ட இவர்  யார், எதுக்கு தெரியுமா...?

Asianet News Tamil  
Published : Nov 01, 2016, 07:11 AM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
தன் பெயரை “ஐ போன் செவன்” என  மாற்றிகொண்ட இவர்  யார், எதுக்கு தெரியுமா...?

சுருக்கம்

தன் பெயரை “ஐ போன் செவன்” என  மாற்றிகொண்ட இவர்  யார், எதுக்கு தெரியுமா...?

ஒரு போனுக்காக,  தன்னுடைய   பெயரையே மாற்றி, அனைவரின்  கவனத்தையும்  ஈர்த்துள்ளார் உக்ரனை இளைஞர் ஒருவர்.

ஐ போன் 7 பற்றி  நம்  அனைவருக்கும்  தெரியும். அந்த  அளவுக்கு  மக்களிடையே  நல்ல  வரவேற்பை பெற்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 7-யை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்வுகள், போட்டிகள் உலகமெங்கும் நடைபெற்று  வருவது  அனைவருக்கும்  தெரிந்த  ஒன்றே.....

இந்நிலையில், எலக்ட்ரானிக் விற்பனையகம் ஒன்று, தனது பெயரை ஐ போன் 7 என அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொள்ளும், முதல் ஐந்து பேருக்கு, ஐ போன் 7 போனை பரிசாக அளிப்பதாக அறிவித்தது.

இந்த  சவாலை,  உண்மையில்  பெரும் சவாலாக  ஏற்றுகொண்ட 20 வயதான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இளைஞர், தனது பெயரை ”ஐ போன் செவன்” என அதிகார பூர்வமாக மாற்றிக் கொண்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

பின்னர், அந்த  நபருக்கு  அறிவித்த  மாதிரியே புதிய  ஐபோன்  7 பரிசாக  வழங்கப்பட்டது.

இதில்  என்ன  ஒரு   சுவாரசியம் என்றால், ஐ போன் 7 -ன் விற்பனை விலை 850 அமெரிக்க டாலர்கள்.ஆனால் அதிகாரப்பூர்வமாக பெயரைமாற்ற ஆன செலவு 2 அமெரிக்க டாலர்கள் மட்டுமே என்பது தான் வேடிக்கை ........!!!

தம்பி  நீங்க  நல்லா வருவீங்க.......

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!