தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா..! "பாதிக்கப்பட்டவர்" காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை..!

By ezhil mozhiFirst Published Mar 7, 2020, 7:06 PM IST
Highlights

தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கம் இல்லை என மன நிம்மதியோடு இருந்த மக்களுக்கு இப்போது பேரதிர்ச்சியாக ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை வந்தடைந்தது கொரோனா..! "பாதிக்கப்பட்டவர்" காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை..!  

உலகையே அச்சுறுத்தி வந்த வந்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவை தாக்க தொடங்கியுள்ளது. அந்தவ கையில் நேற்று வரை 31 நபருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு டெல்லியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையும் நாம் அறிந்ததே.

இந்த ஒரு நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கம் இல்லை என மன நிம்மதியோடு இருந்த மக்களுக்கு இப்போது பேரதிர்ச்சியாக ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இவரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் மூவருக்கு கரோனா வைரஸ் தாக்கம் இருப்பதை உறுதி செய்யப்பட்டு உள்ளதால் 31 இல் இருந்து 34 ஆக உயர்ந்து உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சஞ்சீவ குமார் தெரிவித்துள்ளார் 

அதாவது ஈரானிலிருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களது ரத்த மாதிரியை எடுத்து சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ்டன் சோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து பார்த்த பிறகு அதன் ரிசல்ட் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி ஆனதால் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்க தேவையான வார்டை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

click me!