"ஒரே நாடு ஒரே மொழி திட்டம்" மத்திய அரசு அளித்த அதிரடி பதில் என்ன?

By ezhil mozhiFirst Published Nov 21, 2019, 2:03 PM IST
Highlights

இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு காட்டி வரும் தமிழ்நாடு  இந்த அறிவிப்புக்கு பின் கடும் கொந்தளிப்பானது. பின்னர்  இது குறித்த பேச்சு சற்று சைலண்டானது. 

"ஒரே நாடு ஒரே மொழி திட்டம்" மத்திய அரசு அளித்த அதிரடி பதில் என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே மொழி என்ற திட்டத்தை பற்றிய அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்புக்குப் பின்னர் இந்தி பேசாத சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

குறிப்பாக இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு காட்டி வரும் தமிழ்நாடு  இந்த அறிவிப்புக்கு பின் கடும் கொந்தளிப்பானது.பின்னர் இது குறித்த பேச்சு சற்று சைலண்டானது. 

இதற்கிடையில் இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதன்படி ஒரே நாடு ஒரே மொழி கொண்டுவர ஏதாவது திட்டம் உள்ளதா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த உள்துறை ராஜாங்க மந்திரியான ஜி.கிஷான் ரெட்டி, ஒரே நாடு ஒரே மொழி என கொண்டுவரும் திட்டம் இல்லை. அரசியல் சாசன சட்டமானது நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் அளித்துள்ளது என எழுத்து மூலமாக பதில் கொடுத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு மற்றும் மாநில அரசு என இரண்டு பட்டியலிலும் மொழி விவகாரம் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!