12 ராசியினரில் இவர்களுக்கு மட்டும் தான் கொஞ்சம் கஷ்டம்..!

Published : Nov 21, 2019, 01:14 PM IST
12 ராசியினரில் இவர்களுக்கு மட்டும் தான் கொஞ்சம் கஷ்டம்..!

சுருக்கம்

செல்வந்தர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனத்தை வாங்குவீர்கள். கடிதம் மூலம் பல முக்கிய செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

12 ராசியினரில் இவர்களுக்கு மட்டும் தான் கொஞ்சம் கஷ்டம்..! 

மேஷ ராசி நேயர்களே...!

உங்களின் மதிப்பும் மரியாதையும் நாளுக்குநாள் உயரும். சவாலான காரியங்களை மிக எளிதாக செய்து காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

செல்வந்தர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனத்தை வாங்குவீர்கள். கடிதம் மூலம் பல முக்கிய செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

குதூகலம் அதிகரிக்கும் நாள். சகோதரர்கள் எதிர்பாராதவிதமாக வந்து உதவி செய்வார்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய திட்டம் ஒன்றை தொடங்குவீர்கள். பெற்றோர்கள் நலன் கருதி பல முக்கிய முடிவை எடுப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

தனவரவு தாராளமாக இருக்கும். உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய வாய்ப்பு உங்களை தேடி வரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

துன்பங்கள் வந்தாலும் அதனை தவிடுபொடியாக்கி அலுவலக பணிகள் மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். 

கன்னி ராசி நேயர்களே..! 

மருத்துவ செலவை ஏற்பட வாய்ப்பு உண்டு. மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் சில காரியங்களில் வெற்றி அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்

துலாம் ராசி நேயர்களே...!

வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தியாக இருக்கும். இல்லத்தில் மங்கல ஓசை ஏற்பட வாய்ப்புண்டு. வெளிநாட்டு பயணங்கள் செல்ல திட்டம் போடுவீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே....!

உங்களை தேடி பாராட்டும் புகழும் வரும். உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் நீங்கள் கேட்ட உதவிகளை  செய்து கொடுப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். வீடு மனை வாங்க திட்டமிடுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

நம்பிக்கை அதிகரிக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணப்பற்றாக்குறை அகலும். உங்களின் செயல்பாடுகளை கண்டு அனைவரும் பெருமை அடைவார்கள்.

மகர ராசி நேயர்களே...!

தெய்வ வழிபாட்டால் திருப்தியாககாணப்படுவீர்கள். திடீர் தனவரவு ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. செய்யும் தொழில் வேலையாட்களால் உங்களுக்கு பிரச்சினை வரலாம். சொல்லப்போனால் இன்று உங்களுக்கு அவ்வளவு சுமூகமான நாளாக அமைய வாய்ப்பு இல்லை...

கும்ப ராசி நேயர்களே...!

கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கண்ணும் கருத்துமாக செய்யும் வேலையில் மும்முரமாக இருப்பீர்கள். 
வாழ்க்கை தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வருங்கால நலன் கருதி பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மீன ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றி அடையும். வீடு இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள் இன்று உங்களுக்கு அருமையான நாளாக அமையும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்