குமட்டல் மற்றும் பசியின்மை இருக்க... அப்படினா அலட்சியம் வேண்டாம்? ஒமைக்ரான் தொற்றின் புதிய அறிகுறிகள்...

By manimegalai aFirst Published Jan 12, 2022, 12:15 PM IST
Highlights

முழு தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டவை ஒமைக்ரான் தொற்றின் பொதுவான அறிகுறியாகும்.

ஒட்டுமொத்த உலகமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. என்ன தான் இந்த கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு கரோனாவின் டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்தி குறுகிய காலத்தில் பல உயிர்களைப் பறித்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனாவின் ஒமைகிறான் மாறுபாடு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த சூழலில் மற்றுமொரு புதிய வகை கரோனா வைரஸ் டெல்டாக்ரான்  என்ற பெயரில், சைப்ரஸ் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தென்படத் தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் மனதில் மீண்டும் அச்சம் அதிகரிக்கிறது.

ஒமைக்ரான் தொற்று பாதிப்பின் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும், வேகமாக பரவி வருகிறது என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒமைக்ரான் தொற்றால் தாக்கப்பட்டவர்களுக்கு குமட்டல் மற்றும் பசியின்மை என்ற இரண்டு அறிகுறிகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.  

அறிக்கைகளின்படி, முழு தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டவை ஒமைக்ரான் தொற்றின் பொதுவான அறிகுறியாகும்.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவகள் பலருக்கு சோர்வு, குமட்டல், தசை வலி, இருமல், காய்ச்சல் பசியின்மை, லேசான வெப்பநிலை, தொண்டை புண் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சோர்வு மற்றும் தொண்டை புண்: தொற்று அதிகப்படியான சோம்பலுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஒமைக்ரான் மாறுபாட்டின் நான்காவது பொதுவான அறிகுறியாக தொண்டை புண்  இருப்பதால் எச்சரிக்கையாக இருங்கள்

 தலைவலி மற்றும் தசை வலி : தலைவலி பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம். ஆனால் இது ஒமைக்ரானின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். தசை வலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் அது  கரோனாவின் அறிகுறியாகவும் இருக்கலாம்.  

இருமல், குமட்டல் மற்றும் பசியின்மை:

இருமல் உள்ளவர்கள் சமீபத்தில் ஒமைக்ரான் மாறுபாட்டிற்கு  ஆளாகியிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை பாதிப்பு நம்மில் பலருக்கு சளி பிடித்தது போல் உணரலாம். அது 50 இல் ஒருவருக்கு மட்டுமே  அவர்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் விதமான நீண்ட கால அறிகுறிகளுடன் விட்டுச்செல்லும் என்று ஆய்வு பயன்பாடு எச்சரிக்கிறது.

இது தொடர்பாக  மருத்துவர்கள் கூறுகையில், ஓமிக்ரான் தொடர்பான நோய்த்தொற்றுகள் மிகவும் லேசானவை, இந்த தொற்றினால் பாதிக்கப்படும்போது  தொண்டை பிரச்சினைகள், பசியின்மை போன்ற பொதுவான பலவீனம் இருக்கும். தேசிய மற்றும் சர்வதேச தரவுகளின்படி, இருமல், சளி, மூச்சுத் திணறல், வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற வழக்கமான அறிகுறிகள் பெரும்பாலான நிகழ்வுகளில் காணப்படுவதில்லை, என்று கூறியுள்ளார்.

ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம்:

ஓமிக்ரானின் அனைத்து அறிகுறிகளையும் கண்டறிந்து, பரிசோதனை செய்து, உரிய சிகிக்சை மேற்கொள்ள வேண்டும். தீவிரம் குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையில் வீட்டில் தனிமை படுத்தி கொள்ள வேண்டும்.

இரண்டு தடுப்பூசி போடுங்கள், முககவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடிங்கள்.உங்கள் உணவில் சிறிய மாற்றங்களுடன் உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவசியமாகும்.

click me!