பரபரவெனப் பரவும் ஓமிக்ரான்... என்னென்ன இயங்கும்... எதற்கெல்லாம் கட்டுப்பாடு... வந்தது முழு உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Jan 5, 2022, 5:23 PM IST
Highlights

பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். பொது/தனியார் பேருந்து போக்குவரத்து தொற்று பாதுகாப்பு உரிய நெறிமுறைகளுடன் தொடரும்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மூன்றாம் அலையான ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் இருக்கும். பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். பொது/தனியார் பேருந்து போக்குவரத்து தொற்று பாதுகாப்பு உரிய நெறிமுறைகளுடன் தொடரும். இரவு நேர ஊரடங்கின்போது பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படும்.

Latest Videos

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும். தற்போது செயல்படுத்தப்பட்டு வரும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. திருமண நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
துணிக்கடைகள்/நகைக்கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிலையங்கள் மற்றும் அனைத்து திரையரங்குகளும் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அரசு, தனியார், மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளைத் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு ஜன.20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

தொற்றைக் கட்டுப்படுத்த பயிற்சி நிலையங்கள் (Training and coaching centres) செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்து பள்ளிகளிலும், 1-9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து தனியார்/அரசு சார்பில் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்வோர் அலுவலக அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!