Omam recipe: கோடையில் வரும் செரிமான கோளாறு, வயிற்று கடுப்பு பிரச்சனை...சரி செய்யும் சுவையான ஓமம் சாதம் ரெசிபி

Published : Mar 17, 2022, 06:54 AM ISTUpdated : Mar 17, 2022, 06:57 AM IST
Omam recipe: கோடையில் வரும் செரிமான கோளாறு, வயிற்று கடுப்பு பிரச்சனை...சரி செய்யும் சுவையான ஓமம் சாதம் ரெசிபி

சுருக்கம்

Omam rice recipe: கோடையில் சிலருக்கு, எந்த உணவு கொடுத்தாலும் செரிமான கோளாறு, வயிற்று கடுப்பு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஈஸியான ரெசிபி கைவசம் உள்ளது.

கோடை காலம் வந்து விட்டாலே, சூரியனில் வெயில் நம்மை வாட்டி வதைக்க ஆரம்பித்து விடும். இந்த ஆண்டு, ஆரம்ப நேரத்திலேயே வெயில் கொடுமை அதிகமாகவே இருக்கிறது. இதனால், சிலருக்கு செரிமான கோளாறு, வயிற்று கடுப்பு பிரச்சனைகள் அடிக்கடி வர ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் உடல் சூடும் அதிகரித்திருக்கும். சிலருக்கும், உதட்டில் வெடிப்பு, புண்கள் நாக்கு வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். 

இந்த நேரத்தில், அவர்களுக்கு எந்த உணவு கொடுத்தாலும்  செரிமான கோளாறு, வயிற்று கடுப்பு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஈஸியான ரெசிபி கை வசம் உள்ளது. இந்த உணவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளலாம். அப்படி, அது என்ன வுநவ்வுள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். 

 நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும். அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

இவற்றில் சுவையான ரெசிபி எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: 

பாஸ்மதி அரிசி – 200 கிராம்

கடுகு – 1/2 டீஸ்புன் 

உளுத்தம் பருப்பு –  1 டீஸ்புன் 

கடலைப்பருப்பு – 1 டீஸ்புன் 
 
பச்சை மிளகாய் கீறியது – 4

இஞ்சி நறுக்கியது சிறிய துண்டு – 1  

எண்ணெய் – 2  டீஸ்புன் 

நெய் – 2  டீஸ்புன் 

ஓமம் – ஒரு டீஸ்புன் 

உப்பு –  1 டீஸ்புன் 

மஞ்சள் தூள் – 1\4 டீஸ்புன் 

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி 

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி 

செய்முறை:

1. முதலில்  200 கிராம் பாஸ்மதி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதில் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். 

2. பின்னர், மறுபடியும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். பிறகு அடுப்பில் சாதம் வடிப்பதற்கு அரிசியை சேர்த்து, ஒரு பதம் முன்னாடி வேக வைத்து, வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

3. பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, இரண்டு டீஸ்புன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். 

4. பிறகு இவற்றுடன் ஒரு டீஸ்புன் கடலைப்பருப்பு மற்றும் ஒரு  டீஸ்புன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இதனுடன் ஒரு  டீஸ்புன் ஓமம் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.

5. பிறகு கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு, கால் டீஸ்புன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். 

6. கடைசியாக, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஓமம் சாதம் ரெசிபி ரெடி.

மேலும் படிக்க...Today astrology: மார்ச் 27 முதல் குரு உதயம்....ராஜ யோகம் பெறப்போகும் 5 ராசிகள்..! இன்றைய ராசி பலன்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்