Today astrology: மார்ச் 27 முதல் குரு உதயம்....ராஜ யோகம் பெறப்போகும் 5 ராசிகள்..! இன்றைய ராசி பலன்!

Anija Kannan   | Asianet News
Published : Mar 17, 2022, 06:08 AM IST
Today astrology: மார்ச் 27 முதல் குரு உதயம்....ராஜ யோகம் பெறப்போகும் 5 ராசிகள்..! இன்றைய ராசி பலன்!

சுருக்கம்

Today astrology: குரு பகவான் மார்ச் 27 ஆம் தேதி மீண்டும் உதயமாகிறார். வியாழன் உதயத்தால், இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

குரு பகவான் மார்ச் 27 ஆம் தேதி மீண்டும் உதயமாகிறார். வியாழன் உதயத்தால், இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

ஜோதிடத்தின் படி, ஒருவரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள், ராசி பலன்களை வைத்து கணிக்கப்படுகிறது. இது, சிலருக்கு சந்தோஷத்தை கொடுக்கும். சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தும். 

குருபகவான் மகர ராசியில் அதாவது நான்காம் ராசியில் உச்சம் பெற்று பத்தாம் ராசியில் செல்ல இருக்கிறார். அதன்படி, பிப்ரவரி 23 ஆம் தேதி கும்பத்தில் அஸ்தமித்த குரு பகவான் மார்ச் 27 ஆம் தேதி மீண்டும் உதயமாக உள்ளது. ஜோதிடத்தின் படி, வியாழன் பிப்ரவரி 19, 2022 அன்று கும்பத்தில் அஸ்தமித்து, அது தற்போது மார்ச் 20 அன்று உதயமாகும்.வியாழன் உதயத்தால்  இந்த 5 ராசிகளுக்கு ஒளிமயமான வாழ்கை அமையும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

மேஷம்: 

உங்கள் ராசியில் வியாழன் பன்னிரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார்.உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், லாபம் வரும். நீங்கள் வேலையில் இருந்தால், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். மொத்தத்தில் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

கடகம்: 

உங்கள் ராசியில் வியாழன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம்.தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பெரும் பண ஆதாயத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய வேலையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்ய இது நல்ல நேரம். அதே சமயம், வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்: 

வியாழன் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்கள் தொழிலில் பெரிய பதவியை பெறலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் லாபம் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு: 

வியாழன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் உதயமாவார். வியாழன் உதயத்தால், தனுசு ராசிக்காரர்களின் பணமும் புகழும் அதிகரிக்கும். பதவி, கௌரவம் ஆகியவை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால், தொழிலில் முன்னேற்றம் மேலோங்கி இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வேலையைப் பற்றி நன்கு அறிந்த பிறகே முடிவு எடுங்கள். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மிதுனம்:

வியாழன் உங்கள் ராசிக்கு பதினோராம் வீட்டில் உதயமாவார். வியாழன் உதயத்தால், மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாத காலம் வெற்றி மழை பொழியும். உங்கள் தொழிலில் பெரிய பதவியை பெறலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் எளிதாக முடியும். வியாபாரிகள் லாபம் பெறலாம். பதவி உயர்வு பெறலாம். பணம் சாதகமாக இருக்கும். தடைபட்ட திருமண காரியங்கள் விரைவில் நடக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் பெறுவீர்கள்.

மேலும் படிக்க...Today astrology: 30 ஆண்டுக்கு பிறகு சனி பகவான் கும்ப ராசிக்கு வருகை...இந்த 5 ராசிகளுக்கு அடித்தது ஜாக்பார்ட்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்