கால்பந்து விளையாட்டில் தூள் கிளப்பிய கன்னியாஸ்திரிகள்! ஒரே உதை எகிறிய பந்து...வைரல் வீடியோ!

By Anu KanFirst Published Feb 23, 2022, 12:43 PM IST
Highlights

இத்தாலியில் கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து கால்பந்து விளையாட்டில் தூள் கிளப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இத்தாலியில் கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து கால்பந்து விளையாட்டில் தூள் கிளப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாகவே வைரலாகும் பாடல்களுக்கு, பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடுவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இன்னும், சிலர் பயனுள்ள சில தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில், கடவுளின் ஊழியர்களாக கருதப்படும் கன்னியாஸ்திரிகள் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கால்பந்து விளையாட்டிற்கு புகழ்பெற்ற நாடக இத்தாலி கருதப்படுகிறது. அங்கு ஒரு கன்னியாஸ்திரிகளின் குழு சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் போல திறமையாக முழு வீச்சுடன் கால்பந்து  விளையாடியுள்ளனர். 

அந்த வீடியோவில் ஒரு சிறிய கால்பந்தாட்ட மைதானத்தில் இருவர் இருவராக இரண்டு குழுக்கள் பிரிந்து மொத்தமாக நான்கு கன்னியாஸ்திரிகள் விளையாடுகின்றனர். நன்கு பயிற்சி பெற்ற வீரர்களை போல இவர்கள் விளையாடுகின்றனர்.  

இவர்கள் உற்சாகமாக விளையாடி கொண்டிருக்கும்பொழுது ஒரு கன்னியாஸ்திரி பந்தை எட்டி உதைக்கையில் பந்துக்கு பதிலாக அவர் காலில் அணிந்திருந்த ஷூ பறந்து போயி விழுகிறது, பின்னர் அனைவரும் சிரித்துக்கொண்டு மீண்டும் ஆட்டத்தை தொடர்கின்றனர்.கடவுளின் ஊழியர்களாக கருதப்படும் கன்னியாஸ்திரிகள் இவ்வளவு திறமையாக கால்பந்து விளையாடுவது பலரையும் பிரம்மிக்க செய்து இருக்கிறது.

இந்த வீடியோ இதுவரை 3 மில்லியன் பார்வைகளை கடந்து இருக்கிறது. இந்த வைரல் வீடியோ ஐஜி இத்தாலி என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவை பக்கத்து வீட்டில் உள்ள  யாரோ எடுத்து இதனை இணையத்தில் பதிவேற்றி இருக்கின்றனர்.  

வீடியோவுடன்  கீழே குறிப்பிட்டுள்ள கேப்ஷனில்"இத்தாலியில் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இங்குதான் கடந்த ஆண்டு உலகின் முதல் தேசிய கால்பந்து அணி உருவானது பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், ஏற்கனவே திருச்சபையின் பாதிரியர்களால் ஐரோப்பிய லீக் தேசிய அணி உருவாக்கப்பட்டது.  ஆண்கள் அணியை போலவே நீண்ட நாட்களாக பெண்கள் அணியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இத்தாலிக்கு இருந்து வந்தது. அதன்பின்னர், திறமையான கன்னியாஸ்திரிகளை அடையாளம் கண்டு அவர்களை வைத்து ஒரு கால்பந்தாட்ட அணி உருவாக்கப்பட்டது.  

இவர்கள் நவம்பர் இறுதியில் டெஸியோவில் நடைபெற்ற "கால்பந்து  நிகழ்ச்சியில் பங்கேற்று வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் குழுவோடு விளையாடினார்கள்.  தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, பலரும் பாசிட்டிவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


 

click me!