80-களில் கனவு நாயகியின் இயற்கை ஷாம்பு தயாரிப்பு முறை..? இரண்டு வருடங்கள் கேரண்டி..! சூப்பர் டிப்ஸ்..!

By Anu KanFirst Published Feb 23, 2022, 11:35 AM IST
Highlights

ஆரோக்கியமான முறையில், கூந்தலை பராமரிப்பதற்கு தேவையான பராமரிப்பு முறைகளை அருணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

ஆரோக்கியமான முறையில், கூந்தலை பராமரிப்பதற்கு தேவையான பராமரிப்பு முறைகளை அருணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் 80-களில் எவர்கிரீன் நடிகையாக இருந்தவர் நடிகை அருணா. 1980 ஆம் ஆண்டு வெளிவந்த கல்லுக்குள் ஈரம் என்னும் திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தவர்.அந்த யதார்த்தமான கிராமத்துப் பெண் சோலையைத் தமிழ் நெஞ்சங்கள் இன்றளவும் மறக்கவில்லை. 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர், காதல் திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகினார்.தற்போது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் நடிகை அருணா. 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரோக்கிய வாழ்விற்கு தான் மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.அதில் ஒன்றுதான் கெமிக்கல் ஃபிரீ ஷாம்பு. 

அந்த ஷாம்புவை செய்வதற்கு தேவையான பொருட்கள்:

 சிகைக்காய் _ 2 கப் 

செம்பருத்தி  இலை -ஒரு கைப்பிடி 
 
செம்பருத்தி பூ - ஒரு கைப்பிடி 
 
சந்தனம் -2 

கரிசலாங்கன்னி - ஒரு கப் 

காயந்த ரோஜா பூ -  ஒரு கப் 

செய்முறை:

ஷாம்பு செய்வதற்கு முதலில் சோப் நட், சிகைக்காய் , செம்பருத்தி  இலை அல்லது பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் . அதன் பிறகு சந்தனம் , கரிசலாங்கன்னி , காயந்த ரோஜா பூ இவற்றை பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் . அதன் பிறகு சோப்பு கொட்டையை உடைத்து அதன் விதையை எடுத்து விட வேண்டும் . அதனுடன் சுடு தண்ணீர் கலந்து  வைத்துக்கொள்ளவும்.  அதோடு சிகைக்காய் மற்றும் செம்பருத்தி இலையை அரைத்து சுடு தண்ணீருடன் கலந்துகொள்ள வேண்டும். தற்போது நுரை நன்றாக வர தொடங்கும். இதனுடன் அரைத்து வைத்த பொடியை சேர்த்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால் வெந்தயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இரண்டு வருடங்கள் வரை ஷாம்பு மற்றும் கண்டிஷ்னராக இதனை பயன்படுத்தலாம்  என அருணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளார். அந்த வீடியோவை பார்த்து நாமும் பயன்பெறலாம்.


 

click me!