எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பைசா கூட வரி செலுத்த வேண்டாம்.. வருமான வரி இல்லாத நாடுகள் இவை தான்!

Published : Sep 06, 2023, 09:51 AM ISTUpdated : Sep 06, 2023, 09:53 AM IST
எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பைசா கூட வரி செலுத்த வேண்டாம்.. வருமான வரி இல்லாத நாடுகள் இவை தான்!

சுருக்கம்

உலகில் வருமான வரி வசூலிக்காத சில நாடுகள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான்

குறிப்பிட்ட வருமானம் ஈட்டும் ஒவ்வொரு நபரும் இந்தியாவில் வருமான வரி செலுத்த வேண்டும், அவர்கள் எந்த துறையில் வேலை செய்தாலும் சரி வருமான வரி செலுத்துவது கட்டாயம். இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான அரசாங்கங்களின் வருமானத்தின் முக்கிய ஆதாரமாக வருமான வரி உள்ளது. இந்தியாவில், உங்கள் சம்பளத்தின் அடிப்படையில் வருமான வரி விதிக்கப்படுகிறது, அதாவது நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் செலுத்த வேண்டும்.

ஆனால் உலகில் வருமான வரி வசூலிக்காத சில நாடுகள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான். இந்த நாட்டில் உள்ளவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் வருமான வரியாக அரசுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டியதில்லை. எனவே வருமான வரி இல்லாத நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பஹாமஸ்

பஹாமஸ் நாடு தனது குடிமக்கள் மீது வருமான வரி விதிக்கவில்லை. உண்மையில், இந்த நாடு குடியுரிமையை சார்ந்து இல்லாமல் வசிப்பிடத்தை சார்ந்துள்ளது. இதனால் பஹாமஸ் ருமான வரி இல்லாத வாழ்க்கையை வழங்கும் நாடுகளில் ஒன்றாக மாறி உள்ளது. இருப்பினும், நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு குறைந்தபட்ச வசிப்பிட தேவை குறைந்தது 90 நாட்கள் ஆகும். வெளிநாட்டினரைப் பொறுத்தவரை, அவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒரு சொத்து வைத்திருக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப கொள்முதல் தொகையை பூர்த்தி செய்ய வேண்டும்.

மொனாக்கோ

அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக மொனாக்கோ அறியப்படுகிறது. மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் மாநாடு நடத்துவதற்கும் அறியப்படுகிறது. மிகவும் அழகிய இடமாக உள்ள மொனாக்கோ வாழ்வதற்கு மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாகும். இந்த நாடும் வருமான வரி விதிக்கவில்லை. மொனாக்கோ நாடு, தங்குவதற்கு மிகவும் விலையுயர்ந்த இடங்களில் ஒன்றாகும். இங்கு தங்குவதற்கு ஒருவர் சட்டப்பூர்வ குடியிருப்பு அனுமதி பெற வேண்டும், அது மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் அதற்கு 500,000 யூரோக்கள் செலவாகும். மொனாக்கோவில் குற்ற விகிதம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டுக்கு செல்ல விசா தேவையில்லை.. இந்திய அரசு வெளியிட்ட புது விதிமுறைகள் - முழு விபரம் இதோ !!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)

மத்திய கிழக்கில் உள்ள பல எண்ணெய் நாடுகளில் வருமான வரி அல்லது பெருநிறுவன வரி இல்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அவற்றில் ஒன்று. இது ஒரு செழிப்பான பொருளாதாரம் மற்றும் பல கலாச்சார சூழலைக் கொண்டுள்ளது. இந்த நாடும் தனது குடிமக்களிடமிருந்து வருமான வரி வசூலிப்பதில்லை.

பெர்முடா

வருமான வரி இல்லாத இந்த நாடு வாழ்வதற்கு மிகவும் விலை உயர்ந்த இடமாகும் ஆனால் பெர்முடாவின் இளஞ்சிவப்பு மணல் கடற்கரைகள், உயர்தர உணவகங்கள் மற்றும் இயற்கை அழகுக்கு மிகவும் பிரபலமானது. பெர்முடா தனிநபர் வருமான வரியை விதிக்கவில்லை, ஆனால் அது முதலாளிகள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு மீது நில வரி விதிக்கிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்