RTGS, NEFT: இனி கட்டணம் இல்லை..! ஜூலை 1 முதல் அமல்..! மத்திய அரசு அதிரடி..!

By ezhil mozhiFirst Published Jun 13, 2019, 4:52 PM IST
Highlights

டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது மத்திய அரசு. அதன் பின்னர் தற்போது பொதுவாகவே பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்

டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது மத்திய அரசு. அதன் பின்னர் தற்போது பொதுவாகவே பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் படி RTGS, NEFT ஆகியவற்றின் மூலமாக பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பரிமாறி வருகின்றனர். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அந்தந்த வங்கிகள் வசூலித்து வந்தது. உதாரணத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் மேலாக RTGS மூலம் பணம் அனுப்ப ரூ.5 ரூபாயிலிருந்து ரூ.20 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதை போன்று இரண்டு லட்சத்திற்கும் குறைவான பணம்
NEFT மூலம் செலுத்தும்போது, ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக்கு பரிமாற்றம் செய்ய ரூ.1 முதல் ரூ. 5 வரை வசூலிக்கப்பட்டது. 

பண பரிமாற்றத்திற்கு வங்கிகள் அதிக பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் பெரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதன் எதிரொலியாக RTGS, NEFT ஆகியவற்றுக்கான கட்டணம் ரத்து செய்யப்படும் என தெரிவித்து உள்ளது மத்திய ரிசர்வ் வங்கி   

அதன் படி, இந்த முறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் 4.30 மணி வரையில் மட்டுமே ஆர்.டி.ஜி.எஸ்  சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாலை 6 மணி வரை சேவையை மேற்கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது என்பது கூடுதல் தகவல். ஆர்பிஐ எடுத்துள்ள இந்த முடிவு மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

click me!