முதல்ல என்கவுண்டர்.. இப்ப தூக்கு...! நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட சிறப்பு காவலர்கள் திகாருக்கு விரைவு...!

By ezhil mozhiFirst Published Dec 12, 2019, 7:05 PM IST
Highlights

கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 6 நபர்கள் கூட்டாக சேர்ந்து ஓடும் பேருந்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாகக் கொல்லப்பட்டார்.

முதல்ல என்கவுண்டர்.. இப்ப தூக்கு...! நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட சிறப்பு காவலர்கள் திகாருக்கு விரைவு...! 

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட உத்திர பிரதேசத்திலிருந்து 2 சிறப்பு காவலர்களை திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது 

கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 6 நபர்கள் கூட்டாக சேர்ந்து ஓடும் பேருந்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாகக் கொல்லப்பட்டார்.  நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய அந்த தருணத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா தாகூர் மற்றும் 16 வயதுடைய ஒரு சிறுவனையும் கைது செய்தனர்.

16 வயது என்பதால் அவனுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம். 

இந்த நிலையில் நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் உத்திர பிரதேசத்தில் இருந்து வரவைக்கப்பட்டு உள்ளனர். எனவே மிக விரைவில் 4  பேருக்கும் தூக்கு தண்டனை  நிராகவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எண்ணெய் ஊற்றி  உயிருடன் எரிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேர் எண்கவுன்டர் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை விராய்வில் நிராகவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

click me!