இந்தியாவில் "ட்ரெயின்".. நியூயார்க்கில் "கப்பல்"! உலகெங்கும் பரவும் மாஸ் "ஐடியா"..!

By ezhil mozhiFirst Published Mar 31, 2020, 1:53 PM IST
Highlights

நியூயார்க் நகரில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால்  தற்போதைய நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறுகிறது வல்லரசு நாடு. மேலும் இப்படியே  நீடித்தால் அடுத்த 2 வாரத்தில் அதிக பாதிப்பு ஏற்படும் என கவலை தெரிவித்த்துள்ளர் டிரம்ப் 

இந்தியாவில் "ட்ரெயின்".. நியூயார்க்கில் "கப்பல்"!  உலகெங்கும் பரவும் மாஸ் "ஐடியா"..! 

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதி வேகமாக பரவி  வ்ருவதால் நியூயார்க் மக்களுக்கு உதவி செய்ய வரும்படி மருத்துவ தன்னார்வலர்களுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது 

தற்போது வரை அங்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது வரை 3164 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்த கட்ட நடவடிக்கை ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது

நியூயார்க் நகரில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் தற்போதைய நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறுகிறது வல்லரசு நாடு. மேலும் இப்படியே  நீடித்தால் அடுத்த 2 வாரத்தில் அதிக பாதிப்பு ஏற்படும் என கவலை தெரிவித்த்துள்ளர் டிரம்ப் 

இந்த நிலையில், நெருக்கடியைச் சமாளிக்க கூடுதலாக 10 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள்  தேவை என்றும் மருத்துவ தன்னார்வலர்கள் உடனடியாக முன்வந்து உதவி செய்ய வேண்டும் வேண்டும் எனவும் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ வேண்டுகோள் விடுத்துள்ளதை அடுத்து 80,000 க்கும் மேற்பட்ட முன்னாள் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற தன்னார்வத் தொண்டு செய்ய முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், மேலும் 1000 படுக்கைகளுடன் அவசர கால மருத்துவமனையாக மாற்றப்பட்ட கடற்படை கப்பலும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ரயில் பெட்டிகளை அவசர கால மருத்துவமனைகளாக மாற்றியது போலவே, அங்கு கப்பலில் அவசர கால மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!