அன்புள்ள நண்பா..! கிடைத்தது... "கலைஞர் எழுதிய கடிதம்"..! ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்..!

By ezhil mozhiFirst Published Aug 28, 2019, 12:51 PM IST
Highlights

முரசொலி பவளவிழா கண்காட்சியில் கலைஞர் இக்கடிதத்தை எழுதுவதுபோல் சிலைவடித்து அமைக்கப்பட்டு உள்ளது

அன்புள்ள நண்பா..! கிடைத்தது...கலைஞர் எழுதிய கடிதம்..! 

கலைஞர் கருணாநிதி அவர்கள், பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் இருந்த போது எழுதிய ஒரு மடல் தற்போது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது

முரசொலி பவளவிழா கண்காட்சியில் கலைஞர் இக்கடிதத்தை எழுதுவதுபோல் சிலைவடித்து அமைக்கப்பட்டு உள்ளது... இந்த கடிதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் பல பொருள் பட அனைவரையும் சிந்திக்க வைக்கிறது...

தனி சிறையில் அடிக்கப்பட்டும் கூட அதனை நேர்மறை எண்ணமாக எடுத்துக்கொண்டு ஒருவரால் உணர முடிகிறது என்றால் அது கலைஞர் ஒருவரால் தான் முடியும் என்பதை  இந்த கடிதம் உணர்த்துகிறது....

அதாவது, அன்று அரசாங்கம் கொடுத்த தனிமைச் சிறையை..தண்டனையாக கருதாமல்..
அந்த தனிமையை ரசித்து அற்புதமான உணர்ச்சிக்குவியலாய் கடிதமாக வடித்துள்ளார்..!

எத்தனை ஆழமான..அழகான கவிதையை.. கடிதமாய் எழுதியுள்ளார்..!

"கலைஞரைப்போல்..
இந்த நூற்றாண்டில் முழு வாழ்க்கையை 
ஏற்றத்தாழ்வுகளை.. புகழ்ச்சி..
இகழ்ச்சிகளை.. வேறு எவர் சமமாய்..
ரசித்து வாழ்ந்தார் இம்மண்ணில்"..! என கலைஞர் பற்றிய பல பதிவுகளை பார்க்க முடிகிறது.
கலைஞர் எழுதிய அந்த கடிதத்தில் உள்ள வாக்கியம்;

அன்புள்ள நண்பா... இங்கே எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது.. ஒரே அமைதி... நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறேன்.. நீண்ட நேரம் மௌனமாக இருக்கிறேன்.. பேச்சின்றி விவாதமின்றி ஓசையின்றி... அசைவின்றி.. வளரும் தாவர வாழ்க்கை... ஓய்வு உடலுக்கு நல்லது. உள்ளத்துக்கும் நல்லது.. அது நம்மை சிந்திக்க வைக்கிறது...!

இந்த கடிதம் குறித்த தகவலை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

click me!