சாதித்து காட்டிய மதுரை டீக்கடைக்காரர் பெண்..! 10 ஆம் வகுப்பு மாணவிக்கு நாசாவில் இருந்து அதிரடி அழைப்பு..!

By ezhil mozhiFirst Published Aug 28, 2019, 12:01 PM IST
Highlights

நாசா விண்வெளி மையத்திற்குச் சென்று அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பை மதுரையை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

நாசா விண்வெளி மையத்திற்குச் சென்று அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பை மதுரையை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

மதுரையை அடுத்து உள்ளது கள்ளந்திரி. இங்கு வசித்து வரும் ஜாபர் உசேன் ஒரு டீ கடையை நடத்தி வருகிறார். இவருடைய மகள் பெயர் தான்யா தக்ஷணம். 15 வயதாகும் இவர் தற்போது மதுரையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்புபடித்து வருகிறார்.

தான்யா சிறுவயது முதலே அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டு படித்து வந்துள்ளார். மேலும் மறைந்த முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாமின் தீவிர ரசிகையாகவும்  இருந்துள்ளார். எப்படியும் தான் விஞ்ஞானி ஆக வேண்டும் என சிறு வயதிலிருந்தே ஆசை கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில்  www.go4guru.com  என்ற வலைத்தளம் மூலம் நடத்தப்பட்ட சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில்  கலந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டதற்காக மூன்று பேர் வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளனர்.

அதில் ஆந்திராவை சேர்ந்த ஒரு மாணவி,மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர், மதுரையை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் தான்யா இந்த வாய்ப்பை பெற்று உள்ளனர். இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா சென்று விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஒருவாரம் தங்கி அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட உள்ளனர்.

இதுகுறித்து தானியா தெரிவிக்கும்போது, "மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்னுடைய ரோல் மாடல் அவரைப் போலவே தானும் விஞ்ஞானி ஆக வேண்டும் என சிறு வயது முதலே ஆசைப்பட்டேன்.. என்னுடைய லட்சியம் தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும்போது நிறைவேறி உள்ளது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார்.

click me!