வேற லெவலுக்கு சென்ற சரவணா ஸ்டோர் அருள்...! போஸ்டர்ல என்ன எழுதி இருக்குன்னு பாருங்க...!

நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தானே விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, அடுத்து அவரது பாதையில் பல உரிமையாளர்கள் பற்றிக்கொண்டு தாங்களே தங்களது விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தனர்.

வேற லெவலுக்கு சென்ற சரவணா ஸ்டோர் அருள்...! போஸ்டர்ல என்ன எழுதி இருக்குன்னு பாருங்க...! 

மாநில தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக சென்னையில் உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் என தலைப்பிடப்பட்ட போஸ்டர் அடித்து ஆங்காங்கு ஒட்டப்பட்டு உள்ளது.இந்த போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Latest Videos

மேலும் இதற்கு தலைவராக தமிழ்வேந்தன், செயலாளராக காமேஷ் என்பவரும் மற்ற சில பதவிகளுக்கு ஆட்களை நியமித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கூடுதலாக உறுப்பினர் சேர்க்கை என கொடுத்து மொபைல் நம்பரும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி வேறு லெவலுக்கு சென்றுள்ளார் என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தானே விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, அடுத்து அவரது பாதையில் பல உரிமையாளர்கள் பற்றிக்கொண்டு தாங்களே தங்களது விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தனர். 

அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு இணையாக அடுத்தடுத்து விளம்பரப்படங்களில் தோன்றினார். இப்போது சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில்  சினிமாவில் ஹீரோவாகி விட்டார். இதற்கிடையில் உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் என தலைப்பிடப்பட்ட போஸ்டர் அடித்து, மாநில தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக போஸ்டர் ஓட்டப்பட்டு உள்ளது.

click me!