பொறியியல் பட்டதாரிகள் இனி 6 முதல் 8 ஆம் வகுப்பு ஆசிரியர் ஆகலாம்..! தமிழக அரசு அதிரடி ஆணை ..!

By ezhil mozhiFirst Published Dec 10, 2019, 4:52 PM IST
Highlights

தற்போது படித்து முடித்து வேலை தேடி அலைந்து வரும் நபர்கள் ஏராளம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஓர் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. 

பொறியியல் பட்டதாரிகள் இனி  6 முதல் 8 ஆம் வகுப்பு ஆசிரியர் ஆகலாம்..!  தமிழக அரசு அதிரடி ஆணை ..! 

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் பட்டதாரிகள் வேலை இல்லாமல் திண்டாடி வரும் நிலையை பார்க்க முடிகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு கொண்டு வந்ததால் பெரிய நிறுவனங்கள் கூட ஜிஎஸ்டி தொகையை அரசுக்கு செலுத்த முடியாமல் இழுத்து மூடினர். குறிப்பாக ஆட்டோமொபைல்ஸ் துறை பயங்கர அடி வாங்கியது.

இது ஒரு பக்கம் இருக்க... மற்ற பல நிறுவனங்கள் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக வேலை இல்லாமல் பல்லாயிரக்கணக்கான என்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இது தவிர்த்து தற்போது படித்து முடித்து வேலை தேடி அலைந்து வரும் நபர்கள் ஏராளம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஓர் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன்படி தமிழக ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் "டெட்" ஆசிரியர் தகுதித்தேர்வு  எழுதி  என்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு கணித ஆசிரியராக செல்லலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் காரணமாக பொறியியல் பட்டதாரிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

click me!