என்னடா புதுசு புதுசா பீதியை கிளப்புறீங்க.. டெல்டா வகையைவிட கொடூரமானது இந்த வைரஸ்.. அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 8, 2021, 7:00 PM IST
Highlights

கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், லாம்ப்டா என்ற புதிய வைரஸ் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், லாம்ப்டா என்ற புதிய வைரஸ் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்து ஆண்டு உலகமே ஸ்தம்பித்தது. பெரும்பாலான நாடுகள் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கினர். அரசுகள் எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது  கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் உருமாறி, மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் 2வது அலைக்கு முக்கிய காரணமாக இருந்த டெல்டா வகை வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல நாடுளில் இதுவரை இல்லாத அளவில் பாதிப்புகள், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது டெல்டா வைரசின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ‘டெல்டா பிளஸ்’ வகை மிரட்டி வருகிறது.

டெல்டாவை ஒப்பிடுகையில் டெல்டா பிளஸ் வீரியமிக்கதாக இருந்தாலும், குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இதுவரை டெல்டா பிளசுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சகட்டமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், இந்திய உட்பட பல்வேறு நாடுகள் 3வது அலை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், டெல்டா வகைகளை விட ஆபத்தான உருமாறிய ‘லாம்ப்டா’ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டில்தான் இந்த வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு பெருவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 82% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தற்போது இங்கிலாத்திலும் பரவி உள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று இங்கிலாந்து வந்த 6 பேருக்கு இந்த வைரஸ் உறுதியாகி உள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!