சரக்கு பாட்டில் இன்விடேஷன்: வம்பிழுக்கு வில்லங்க அழைப்பிதழ்!

 
Published : Oct 28, 2017, 10:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
சரக்கு பாட்டில் இன்விடேஷன்: வம்பிழுக்கு வில்லங்க அழைப்பிதழ்!

சுருக்கம்

new invitation round up whats app

கேரளத்திலிருந்து ஒரு வில்லங்க வாட்ஸ் ஆப் இப்போது தமிழகத்தில் தாறுமாறாக ஷேர் ஆகிக் கொண்டிருக்கிறது. அது சரக்கு பாட்டில் ஒன்றின் படத்துடன் கூடிய திருமண அழைப்பிதழ்தான். 

பொதுவாக மது பாட்டிலின் மேலே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பது போல் இதில் மதுபாட்டில் போட்டோவில், ஸ்டிக்கர் இருக்கும் பகுதியில் திருமணம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ‘வெட்டிங்’ என்று ஸ்டைலிஷாக கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறவிருக்கும் திருமணத்துக்கான அழைப்பிதழ் அது. மணமகன் பெயர் ‘அசோக்’, மணமகள் பெயர் ‘சரயு’வாம். 

பார்த்த மாத்திரத்தில் ஆச்சரியப்படுத்தினாலும் கூட சற்றே முகம் சுளிக்கும் வகையில் உள்ளதாக இந்த அழைப்பிதழ் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதிலும் உலகப்புகழ் பெற்ற குருவாயூர் கோயிலில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் மனதை காயப்படுத்தும் வண்ணம் இருப்பதாகவும் கடும் விமர்சனம் கிளம்பியிருக்கிறது. 

ஆனால் சிலரோ இது பொய்யானது, இணையத்தில் ஒரு சென்சேஷனை கிளப்புவதற்காக சிலர் இப்படி டிஸைன் செய்து அனுப்பியிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். எது உண்மை என்பதை குருவாயூர் போலீஸ் கண்டுபிடித்துவிடலாம். 

வித்தியாசங்களை வரவேற்கலாம், ரசிக்கலாம்! ஆனால் வில்லங்கங்களை?...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்