வேட்டி கட்டி விமானம் ஓட்டிய தமிழன்...! அடம் பிடித்து அனுமதி வாங்கியதால் அசந்தது அமெரிக்கா.....!

Asianet News Tamil  
Published : Oct 24, 2017, 06:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
வேட்டி கட்டி விமானம் ஓட்டிய தமிழன்...! அடம் பிடித்து அனுமதி வாங்கியதால் அசந்தது அமெரிக்கா.....!

சுருக்கம்

aeroplane handled by tamilan in us with the traditional dress

அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே வேட்டி கட்டித்தான் வருவேன், என் பாரம்பரிய உடையை நான் அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? எனச் சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே தமிழன் ரவிகரன் ரணேந்திரன்.

அதாவது தனி விமானத்தை ஓட்டி உள்ளார்.இவர் அகரன் என்ற ஏவுகணையை உருவாக்கியவர். தமிழ்ச் சொற்களைத் தவிர்த்துப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த விரும்பாதவர்

இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகின்றார்.தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில், 'தொடர் செயற் திட்டங்களின் முதல் படிநிலையாக எனது ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக கடினமாக உழைத்து ‘அகரன்'ஐ உருவாக்கியுள்ளேன்.

இது ஒரு மாதிரி ஏவுகணை முயற்சியாகும்.இதைக்கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதில் உருவாக்கிடமுடியும். ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிகவும் வினைத்திறன் கொண்டதென ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்று ரவிகரன் ரணேந்திரன் கூறியுள்ளார்.

இவருடைய  சாதனையை  விட வேட்டி கட்டிக்கொண்டு விமானம்  ஓட்டும் அந்த காட்சி தான்  அனைவரின் மனதிலும் பதிந்து உள்ளது

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Flowers: கடவுளுக்குப் பூக்கள்.! வீடு முழுவதும் வாசம்.! கோடையில் பால்கனியில் வளர்க்க ஏதுவான 6 செடிகள்.!
Miss India 2026: வெறும் 3 மாத பயிற்சி... உலக அழகி போட்டிக்கு தகுதி.. யார் இந்த சாத்வி செய்ல்? மிஸ் இந்தியா சீக்ரெட் கதை!