உங்கள் வீட்டில் நெகட்டிவ் வைப்ரேஷன்..! பாடாய் படுத்தும் அந்த விஷயம்..!

By ezhil mozhiFirst Published Jul 2, 2019, 11:56 AM IST
Highlights

நம் வீட்டில் பொதுவாகவே நல்ல நேர்மைறை எண்ணங்கள் இருந்தால் தான் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு  அடிக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நம் எண்ணம் சிறப்பாக அமைந்தால் தான், அனைத்தும் சிறப்பாக அமையும்.  
 

உங்கள் வீட்டில் நெகட்டிவ் வைப்ரேஷன்..! பாடாய் படுத்தும் அந்த விஷயம்..! 

நம் வீட்டில் பொதுவாகவே நல்ல நேர்மைறை எண்ணங்கள் இருந்தால் தான் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு  அடிக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நம் எண்ணம் சிறப்பாக அமைந்தால் தான், அனைத்தும் சிறப்பாக அமையும்.  

உதாரணத்திற்கு, டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல், சோக இசைகள் இவையெல்லாம் கூட நம் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்துக் கெடுத்து விடும் என்கின்றனர் முன்னோர்கள்.

அபசகுனமான நிகழ்ச்சிகளின் காட்சிகள் டிவிக்குள் நடந்தாலும் அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள் விளைவாக நம் வீட்டில் பல எதிர்மறை எண்ணங்கள் இருக்கும் என்கின்றனர் ஆன்மீக நம்பிக்கைவாதிகள்.

எதிர்மறை எண்ணங்களால் என்னென்ன பிரச்சனை வரும்..?

நம் சிந்தனை வேறு மாதிரி மாறி மன அளவில் பாதிப்பு ஏற்படும். பின்னர் உடலளவில் பிரச்சனை வரும். வீட்டில் பணம் தங்காமல் போகலாம், வீண் செலவுகள் ஏற்படலாம், தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். இதெல்லாம் நமக்கு தேவையா என்ன. ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தான் இப்படி சொல்கிறார்கள்  என நினைக்க வேண்டாம். இன்னொரு பக்கம் மேலும் பல அதிர்ச்சி தகவல் உள்ளது. 

தொலைக்காட்சி  நிகழ்வுகளிலேயே ஊன்றி இருப்பதால், கண் பார்வை கோளாறு, மன இறுக்கம், மன அழுத்தம் உருவாகும். மனநோய் வந்தாலே மாரடைப்பு, இருதயக் கோளாறு, இரத்த அழுத்தம், கழுத்து எலும்புத் தேய்மானம், தலைசுற்றல், தலைவலி, மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும் என்பது மறந்து விட கூடாது.

குடும்பத்தை சீர் குலைக்கும் சீரியல்கள்..!  

இதற்கு எல்லாம் முக்கியமான காரணம்... பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, குடும்பத்தினருக்குள் மாமியார், மருமகள் சண்டை முதல் சந்தேகப்படுவது, சகுனி வேலை பார்ப்பது, எப்படி லஞ்சம் பெறுவது என அனைத்து தவறுகளும் எளிதாக பார்க்க முடியும் .இதனையெல்லாம் தவிர்த்து, விலைமதிப்பில்லா ஓய்வு நேரத்தை அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

click me!