தற்கொலைக் கடிதத்தில் பெயர் இருந்தால் குற்றவாளியா..? உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

By Anu KanFirst Published Feb 24, 2022, 9:12 AM IST
Highlights

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐ ஆரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐ ஆரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தற்கொலைக் கடிதத்தில் பெயர் எழுதப்பட்டதால் மட்டுமே ஒருவர் குற்றவாளியா ஆக முடியாது என்று உயர்நீதிமன்றம், அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஐபிசி 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐ ஆரை ரத்து செய்யக் கோரி ஹர்பஜன் சந்து என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அரசுத் தரப்பின்படி, மஞ்சித் லால் என்பவர் அவரது மைத்துனர் பல்ஜிந்தர் குமார் என்பவர் மூலம்  6-7 நபர்களுடன் பிப்ரவரி 18, 2019 அன்று தாக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் தற்கொலை செய்து கொண்டார். 

 இதையடுத்து, மஞ்சித் லாலின் தந்தையான ஜஸ்விந்தர் லால், தன்னுடைய மகனின் தற்கொலைக்கு மைத்துனர் பல்ஜிந்தர் குமார் கொடுத்த மன உளைச்சல்  தான் காரணம் என்று கூறியதின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இதை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம், தற்கொலைக் கடிதத்தில் பெயர் எழுதப்பட்டதால் மட்டுமே ஒருவர் குற்றவாளியா ஆக முடியாது என்று கூறி பொலிஸார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


 

click me!