ஹீரோ மோடிக்கு இஸ்லாம் பெண்கள் பாலாபிஷேகம்..! ஒரே மசோதாவால் சாதனை..!

By ezhil mozhiFirst Published Aug 1, 2019, 5:32 PM IST
Highlights

அதிக இஸ்லாம் மக்கள் கொண்ட, வேலூர் தொகுதியில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், முத்தலாக் மசோதா எதிரொலியால் வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது  என்ற கணிப்பும் உள்ளது.

முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதால் பிரதமர் மோடியின் படத்துக்கு இஸ்லாம் பெண்கள் பாலாபிஷேகம் செய்து இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முத்தலாக் தடை மசோதா மக்களவையில் தொடர்ந்து, மாநிலங்களவையும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கொண்டாடும் விதமாக இஸ்லாம் பெண்கள் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மற்றும் அமைச்சர் கோயல்  இல்லத்திற்கே சென்று இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இது தவிர்த்து தென்மாநிலங்களில் குறிப்பாக தெலுங்கானாவில் பாஜகவினர் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தனர். இதற்காக மோடியின் உருவம் பதித்த பதாகையை ஏந்தி சென்று கொண்டாடினர். இந்த நிகழ்வில் இஸ்லாம் பெண்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் ஹைதராபாத்தில் பாஜக சிறுபான்மையினர் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மோடியின் படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது, திரளான இஸ்லாம் பெண்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் இந்த மசோதா பெண்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்பை வழங்கி உள்ளதாகவும் இஸ்லாம் பெண்கள் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அதிக இஸ்லாம் மக்கள் கொண்ட, வேலூர் தொகுதியில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், முத்தலாக் மசோதா எதிரொலியால் வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்ற கணிப்பும் உள்ளது.

click me!