இந்தியாவின் விலை உயர்ந்த காரை பரிசாக பெற்ற நபராக நீட்டா அம்பானி மாறி உள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தனது ஆடம்பர வாழ்க்கை முறை பற்றி நம் அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அவரிடம் இல்லாத சொகுசு கார்களே இல்லை என்றே சொல்லலாம். பல்வேறு ஆடம்பர சொகுசு கார்கள் முகேஷ் அம்பானி குடும்பத்திடம் இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் தனது கார் சேகரிப்பில் மேலும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ( Rolls-Royce Cullinan) காரை சேர்த்துள்ளார். அவர் இந்த காரை தனது மனைவி நீட்டா அம்பானிக்கு பரிசாக வழங்கி உள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜின் விலை ரூ. 8.2 கோடி, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10 கோடி ஆகும். இந்தியாவின் விலை உயர்ந்த காரை பரிசாக பெற்ற நபராக நீட்டா அம்பானி மாறி உள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, முகேஷ் அம்பானி இந்த விலை உயர்ந்த பரிசை நீட்டா அம்பானிக்கு வழங்கி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முகேஷ் அம்பானி குடும்பத்தில் ஏற்கனவே பல ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் இணைந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வழக்கமான கல்லினன் கார் மாடலை விட ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது, . இது 6.75-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு (twin-turbocharged) V12 பெட்ரோல் எஞ்சினை நிலையான குல்லினனுடன் பகிர்ந்து கொள்கிறது, இருப்பினும் வழக்கமான கல்லினன் காரை விட இது கூடுதல் திறன் கொண்டதாகும்
வழக்கமான கல்லினன் கார் 571 PS மற்றும் 800 Nm அதிகபட்ச டார்க்கை வெளியேற்றும் நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் கார் அதிகபட்சமாக 600 PS மற்றும் 900 Nm டார்க்கை வெளியேற்றுகிறது.. இருப்பினும், வழக்கமான கல்லினனைப் போலவே, கல்லினன் பிளாக் பேட்ஜின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. ஆகும்
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜின் உட்புறம் தோற்றத்தில் மிகவும் அழகாகவும், நேர்த்தியான பொருட்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் காற்றோட்டமான மசாஜ் செய்யும் வசதி கொண்ட இருக்கை, தியேட்டர் போன்ற பெரிய திரை, மிகச்சிறந்த ஆடியோ சிஸ்டம், பானங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க சிறிய ஃப்ரிட்ஜ் என இந்த காரில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்தியாவிற்கு வரும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட்.. எல்லாமே புதுசு.. காத்திருந்து கார் வாங்கலாம் போலயே..!
எனினும் இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜை வைத்திருக்கும் முதல் ஆளுமை முகேஷ் அம்பானி அல்ல. ஷாருக்கான் சில மாதங்களுக்கு முன்பு தனக்கென ஒரு நுட்பமான வெள்ளை நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினர் கார் ஒன்றை வாங்கினார். கல்லினன் பிளாக் பேட்ஜ் தற்போது ரோல்ஸ் ராய்ஸின் முதன்மை வாகனமாக செயல்படுகிறது, அதன் வரிசையில் பாண்டம் VIII மற்றும் கோஸ்ட் செடான் கார்களும் அடங்கும்.