ஒரே இரவில் பிரபலமடைய வைத்த செல்ஃபீ வித் ராகுல் ..! இந்த பெண் யார் தெரியுமா..?

Published : Jan 12, 2019, 05:05 PM ISTUpdated : Jan 12, 2019, 05:09 PM IST
ஒரே இரவில் பிரபலமடைய வைத்த செல்ஃபீ வித் ராகுல் ..! இந்த பெண் யார் தெரியுமா..?

சுருக்கம்

துபாய்க்குச் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் ஒரு பெண் எடுத்துக் கொண்ட செல்ஃபி தற்போது வைரலாக பரவி வருகிறது காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின், முதல் முறையாக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சமீபத்தில் சென்றிருந்தார்.

ஒரே இரவில் பிரபலமடைய வைத்த செலஃபீ வித் ராகுல் ..! இந்த பெண் யார் தெரியுமா..? 

துபாய்க்குச் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் ஒரு பெண் எடுத்துக் கொண்ட செல்ஃபி தற்போது வைரலாக பரவி வருகிறது காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சமீபத்தில் சென்றிருந்தார்.

துபாய் சென்ற ராகுல், அங்கு இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அங்குள்ள தொழிலாளர்களுடனும் பேசி மகிழ்ந்தார். மேலும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை புரிந்த ராகுல் அந்த கூட்டத்தில் உரையாற்றினார். ஆர்வமாக காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர். அப்போது பெண் ஒருவர் ராகுல்காந்தியுடன் ஆசையாக எடுத்துக் கொண்ட செல்ஃபி தற்போது வைரலாக பரவி உள்ளது. அதற்கு காரணம் துபாய் சென்ற போது என பதிவிட்டு.... ராகுல் காந்தியே அந்த போட்டோவை அப்லோட் செய்திருந்தார்.

அதன்பின் அந்த போட்டோ, பல இணைய தளங்களிலும் செய்தித்தாள்களிலும் வந்ததால் ஒரே நாளில் அந்தப்பெண் சற்று பிரபலமடைந்தார். யார் அந்தப் பெண் என சமூக வலைதளத்தில் தேடியுள்ளனர். அப்போது தான் தெரிய வந்தது அந்த பெண் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அவருடைய பெயர் ஆசின் அப்துல்லா என்பதும், ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த பெண் தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் ஒரே நாளில் இந்த அளவிற்கு நான் பிரபலம் அடைவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை அதேவேளையில் ராகுல் காந்தியுடன் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தையும் அவரை சந்தித்ததையும் எப்போதும் என்னால் மறக்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது என தெரிவித்தார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்
குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் '6' உணவுகளின் லிஸ்ட்