இன்று பூரண சந்திர கிரகணம்..! இந்த நேரத்தில் வெறும் கண்களாலே பார்க்கலாம் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Jul 16, 2019, 11:45 AM IST
Highlights

சூரியன் சூரியன் பூமி சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பூரண சந்திர கிரகணமானது, இன்று  நிகழ உள்ளதால் பொதுமக்கள் இதனை காண பெரும் ஆவல் தெரிவிக்கின்றனர்.
 
இன்று பூரண சந்திர கிரகணம்..! இந்த நேரத்தில் வெறும் கண்களாலே பார்க்கலாம் தெரியுமா..? 

சூரியன் சூரியன் பூமி சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பூரண சந்திர கிரகணமானது, இன்று நிகழ உள்ளதால் பொதுமக்கள் இதனை காண பெரும் ஆவல் தெரிவிக்கின்றனர்.

அதாவது பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால் அது சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி 13 நிமிட அளவில் சந்திர கிரகணம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை ஒரு 1.31 நிமிடம் அளவிற்கு உச்சம் பெற்று அதிகாலை 4.30 மணிக்கு முடிவடைய உள்ளது.

இந்தியாவில் பூரண சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் நாளை ஆடி மாதமும் பிறக்கிறது என்பதால் சந்திரகிரகணத்தை முன்னிட்டு செய்ய வேண்டிய தர்ப்பணத்துடன் மீண்டும் ஆடி மாதம் பிறந்தவுடன் மறுபடியும் தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

பெரும்பாலும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் எதுவாக இருந்தாலும் கிரகண நேரத்தில் பொதுவாக கோவிலை திறந்து வைக்க மாட்டார்கள். அந்த வகையில் திருப்பதி கோவிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு இன்று சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல்.

click me!