ஆண்டுக்கு "60 லட்சம் பேர் டார்கெட்"! கூவி கூவி மதமாற்றம் செய்யும் மதபோதகர் மோகன் லாசரஸ்! சிக்கிய வீடியோ ஆதாரம்

thenmozhi g   | Asianet News
Published : Feb 13, 2020, 05:15 PM IST
ஆண்டுக்கு "60 லட்சம் பேர் டார்கெட்"! கூவி கூவி மதமாற்றம் செய்யும் மதபோதகர் மோகன் லாசரஸ்! சிக்கிய வீடியோ ஆதாரம்

சுருக்கம்

எப்படியாவது மக்களை ஏமாற்றி, ஆசை  வார்த்தைகள் கூறி  மூளைசலவை செய்து மதமாற்றம் செய்வதில் இவருக்கு நிகர் இவரே....  

ஆண்டுக்கு "60 லட்சம் பேர் டார்கெட்"! கூவி கூவி மதமாற்றம் செய்யும் "மதபோதகர் மோகன் லாசரஸ்"! சிக்கிய வீடியோ ஆதாரம்...! 

வெட்ட வெளியில் பட்ட பகலில்.. பிரமாண்ட இடத்தை தேர்வு செய்து ..மக்களை கூட்டி மூளை சலவை செய்து... மதமாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளார் மதபோதகர் மோகன் லாசரஸ் 

எப்படியாவது மக்களை ஏமாற்றி, ஆசை  வார்த்தைகள் கூறி  மூளைசலவை செய்து மதமாற்றம் செய்வதில் இவருக்கு நிகர் இவரே....

மற்ற மதத்தை சேர்ந்தவர்களை மூளை சலவை செய்து மதமாற்றம் செய்வது மட்டுமல்லாமல், குறிப்பாக இந்து மதத்தை பற்றி பல முறை மேடைகளில் கொஞ்சம் கூட நா கூசாமல், மனதில் சற்றும் பயம் இல்லாமல் அவமதித்து பேசுவதும்.. கோவில் கோபுரங்களில் சாத்தான் உள்ளது என கூறி  இந்துக்களின் உணர்வை புண்படுத்திய நபர்

இந்த நிலையில்,மீண்டும ஓர் அதிர்ச்சி கிளப்பும் விதமாக ஓராண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டால் 3 ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம் என கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துகுடி மாவட்டத்தில் "இயேசு விடுவிக்கிறார்" என்ற பெயரில் முழுநேர மதமாற்ற வேலையில் இறங்கி உள்ள இவர் பேசிய விவரம்: 

"பெந்தகோஸ்தே மாமன்றத்தில் 38 ஆயிரம் சபைகள் இணைந்திருக்கின்றன. தற்போது  60 லட்சம்  விஸ்வாசிகள் இருக்கிறார்கள். இந்த 60 லட்சம் விசுவாசிகள் ஆளாளுக்கு ஒரு விசுவாசியை  மதமாற்றம் செய்தால் அடுத்த வருடமே 1 லட்சத்து 20 ஆயிரம்  பேர் கிடைத்து விடுவார்கள்.... பிறகு அதற்கு அடுத்த வருடம்.... அதற்கு அடுத்த வருடம் என அதிகரித்துக்கொண்டே செல்லும் . அப்படி  பார்த்தால் அடுத்த 3 வருடத்தில் இந்த  தமிழ்நாட்டை அசைத்து விடலாம் என சேலஞ்ச் செய்து  உள்ளார் மோகன் லாசரஸ்.

ஆனால் இந்த நிகழ்ச்சி எங்கு நடத்தப்பட்டது, எப்போது பேசினார் என்ற விவரம் இல்லை என்றாலும், அவர் பேசியதும் முழுக்க முழுக்க மதமாற்றம் செய்யும் முயற்சியில் அவரை இறங்கியுள்ளதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. 

மேலும்  பாரதிய ஜனதா கட்சி என்றாலே, இந்துத்துவா என்றும், இந்து வெறியர்ககள் என்றும்   பேசி மக்கள் மத்தியில் தவறான  கருத்துக்களை  பதிய வைக்கும் மத வாதிககளும் மத போதர்காக்களும் நாளுக்கு  நாளுக்கு அதிகரித்து வருகின்றனர். 

இதில் என்ன ஒரு பியூட்டி என்றால், எந்த ஒரு இந்துவும் தன் மதத்திற்கு வா என வேறு  மதித்தினரை நினைத்து கூட பார்ப்பது கிடையாது. கேட்பதும் கிடையாது. அதற்கு பதிலாக மற்ற மத்தினருடன் நட்பு பாராட்டி அழகாக உறவு முறையில் இருப்பார்களேதவிர.. இப்படி கூவி கூவி.. மூளை சலவை செய்வது கிடையாது என  பொதுமக்கள் கடும் கண்டனத்தை முன்வைத்து உள்ளனர்.

இந்த  வீடியோ தற்போது சமுக வலைதளத்தில் பல நபர்களால் பகிரப்பட்டு கண்டனம்  தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்