அங்கே பார்... முழுவதும் "தமிழனாக மாறிய மோடியை" பார்..! வேட்டி சட்டை துண்டுடன் அம்சமாக வந்திறங்கி துவம்சம்..!

By ezhil mozhiFirst Published Oct 11, 2019, 5:18 PM IST
Highlights

தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் மாமல்லபுரம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் சீன அதிபரின் உடனான சந்திப்பு நிகழ்ந்து உள்ளது. 
 

அங்கே பார்....முழுவதும் தமிழனாக  மாறிய மோடியை  பார்..!  வேட்டி  சட்டை துண்டுடன் அம்சமாக வந்திறங்கி துவம்சம்..! 

பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக வேட்டி சட்டை, தோளில்  துண்டு அணிந்து சீன அதிபர் வரவேற்றுள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் மாமல்லபுரம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் சீன அதிபரின் உடனான சந்திப்பு நிகழ்ந்து உள்ளது. 

இந்த சந்திப்பிற்காக சீன அதிபர் இன்று மதியம் 2 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்னர் அங்கிருந்து மாமல்லபுரத்திற்கு சாலை மார்க்கமாக சென்றார். போகும் வழியெல்லாம் அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.

பின்னர் சீன அதிபரை வரவேற்பதற்காக அங்கிருந்து மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு என்ற  பகுதியை அடைந்தார் மோடி.அவ்வாறு செல்லும்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய ஆடையான  வேட்டி சட்டை அணிந்து சென்றுள்ளது அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சீன பிரதமரை வரவேற்கும் விதமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வரவேற்பு செய்தியை பதிவிட்டு இருந்தார். மேலும் இன்று இரவு மோடி மற்றும் ஜி ஜின்பிங் பங்கேற்கும் விருந்தில் இந்திய மற்றும் சீன அதிகாரிகள் 16 பேர் கொண்ட குழு கலந்து கொள்கின்றனர்.

இந்த விருந்தில் தமிழகத்தின் பாரம்பரிய உணவையே  பரிமாரப்படுகிறது என்பது கூடுதல் தகவல். இதற்கிடையில்  தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக வேட்டி சட்டை தோளில் துண்டுடன் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபரை வரவேற்றுள்ள நிகழ்வு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

click me!