குவியலாக சீன நிருபர்கள்...! உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த தமிழனும் தமிழகமும்...!

By ezhil mozhiFirst Published Oct 11, 2019, 2:00 PM IST
Highlights

அதிநவீன கேமராக்களுடன் வந்துள்ள இவர்கள் மாமல்லபுரத்திலிருந்து லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். 

குவியலாக சீன நிருபர்கள்...! உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த தமிழனும் தமிழகமும்...! 

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து உள்ளனர். இன்று மாலை இருவரும் மாமல்லபுரத்தில் இருநாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற இருக்கின்றன.

இரு முக்கிய தலைவர்களும் சந்திக்க இருப்பதால் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரையிலும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்துகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலைகள், முக்கிய இடங்கள் ஆகியவை தூய்மைபடுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

இன்று மாலை நடைபெற உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் குறிப்பாக தொலைக்காட்சி நிருபர்கள் ஆயிரக்கணக்கில் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீன நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.

அதிநவீன கேமராக்களுடன் வந்துள்ள இவர்கள் மாமல்லபுரத்திலிருந்து லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் சீன அதிபர் பார்வையிட உள்ள பல்வேறு இடங்களை படம்பிடித்து அதுகுறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும் இந்தியா முழுக்க உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிருபர்கள் மாமல்லபுரத்திற்கு படை எடுத்து உள்ளனர்.

பொதுவாக வட இந்தியாவில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகளை தென்மாநில தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபடுவது உண்டு. ஆனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடக்கும் மிக மிக முக்கிய நிகழ்வுகளை மட்டுமே வட இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும். அதுகுறித்த நிகழ்ச்சிகளும் இடம் பெறும். ஆனால் இன்று சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்தித்துக்கொள்ளும் மாமல்லபுரம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.

தமிழர்களின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என எத்தனையோ நிகழ்வுகளில் பேசி வருவதை பார்த்து இருப்போம். கோரிக்கையை முன் வைத்து இருப்போம்.. ஆனால் இன்று மாபெரும் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடமாக மாமல்லபுரம் விளங்குகிறது என்றால் இதற்கு எவ்வளவு பெரிய பின்னணி இருக்கும் என்பதை ஓரிரு வார்த்தையில் விளக்கிவிட முடியாது.

இன்று நடைபெறும் இந்த சந்திப்பு குறித்த முக்கிய விஷயங்கள் உலக மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக தமிழர்கள் பற்றியும் தமிழகத்தை பற்றின சிறப்பு இன்று உலகமே அறிந்து கொள்ளும் ஓர் அரிய விஷயமாக அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது
 

click me!