முதல்வர், பிரதமர் பதவிகள் எல்லாம் அவருக்கு முன் எதுவுமே கிடையாது.! முதல் முறையாக நெகிழ்ந்து பேசிய மோடி..!

By ezhil mozhiFirst Published Feb 5, 2019, 5:21 PM IST
Highlights

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் வார தொடராக வருகிறது. அதில் பிரதமர் மோடி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்வர், பிரதமர் பதவிகள் எல்லாம் அவருக்கு முன் எதுவுமே கிடையாது.!  முதல் முறையாக நெகிழ்ந்து பேசிய மோடி..! 

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் வார தொடராக வருகிறது. அதில் பிரதமர் மோடி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த பதிவின் மூலம், மோடி கடந்து வந்த  பல விஷயங்கள் பற்றி  தெரிய வந்துள்ளது.

அதன் படி சென்ற வார பதிவில், மோடியின் நண்பர்கள் மற்றும் சிறு வயது அனுபவத்தை பற்றி வெளிவந்தது. இந்த வாரம் தனது தாயை பற்றி மோடி முதன் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.

அப்போது, "நிறைய பேர் என்னிகிட்ட கேட்ட கேள்வி .. நீங்கள் பிரதமராக பதவி ஏற்ற போது உங்கள் தாய்  எப்படி உணர்ந்தார் என்றனர். அதற்கான பதில் இதுதான்.. குஜராத் முதல்வரானபோது தான் எனது தாய் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். எனது புகைப்படம் முதல் தொண்டர்கள் மத்தியில் என்னை பற்றி பேசுவது வரை எதையும் தன் தாய் பெரிதாய் எடுத்துக்கொள்ள மாட்டார்  என அவர் தெரிவித்து உள்ளார்.

என்னை குஜராத்முதல்வராக தேர்வு செய்த போது, நான் டெல்லியில் தங்கி இருந்தேன். எனது தாயோ அகமதாபாத்தில் உள்ள சகோதரன் வீட்டில் தங்கி இருந்தார். அந்த நேரத்தில் நான் அகமதாபாத் செல்லும் போது கூட தொண்டர்கள் பெரிதாக வரவேற்றனர். என் அம்மாவோ என்னை நேரில் பார்த்த போது சிறிது நேரம் உற்று நோக்கி, பின்னர் கட்டி அணைத்துக்கொண்டார்.

இன்னும் சொல்லப்போனால், அவருக்கு தங்கள் பிள்ளைகள் மீது எப்போதும் பாசம் காண்பிக்கும், நெருக்கமாக அரவணைத்து அன்பு காட்டும் தாயாக தான் இருப்பார். இதை தாண்டி, என்னை சுற்றி என்ன  நடக்கிறது என்பதை கவனிக்க மாட்டார். அவரைப் பொறுத்தவரை முதல்வர், பிரதமர் பதவிகள் எல்லாம் எதுவுமே கிடையாது. எதையுமே பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என் தாய் என இந்த வார தொடரில் தனது தாயுடனான அந்த நட்பை அழகாக எடுத்துரைத்து உள்ளார் பிரதமர். 

click me!