
தான் பிற்படுத்தப்பட்டவன் என்பதால்தான் ராகுல் காந்தி தன்னை கேலி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று மராட்டிய மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்போது, வாரிசு அரசியல் நடத்துபவர்கள் தன்னை தரம் தாழ்ந்து பேசுகிறார்கள்.
காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த சமுதாயத்தில் எல்லா மோடிகளும் திருடர்கள் என்று கூறுகிறார்கள். என்னை ஒருவனை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு இனத்தையே கேவலப்படுத்தி வருகிறார்கள்.
இனி நான் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டேன். நான் காவலாளி என்றால் அவர்கள் திருடன் என்கிறார்கள். உண்மையில் இந்த நாட்டை திருட நினைப்பவர்களுக்கு நான் காவலாளி தான் என்பதை உணர்த்துவேன். இதனால்தான் அவர்கள் என்னையும் தாண்டி என் இனத்தை பற்றி பேசுகிறார்கள்.
நமது நாடு மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டை வழி நடத்த வலிமை வாய்ந்த ஒரு தலைவர் தேவை. பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால் வலிமையான தலைமை கண்டிப்பாக கிடைக்கும். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.