குளிர் ஒரு பக்கம்... வெயில் ஒரு பக்கம்.. இதுக்கு நடுவுல லேசான மழை எங்கெல்லாம் வரப்போகுது தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Jan 20, 2020, 1:43 PM IST
Highlights

வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடிய காற்றின் சுழற்சி காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் மற்றபடி தமிழகம், புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

குளிர் ஒரு பக்கம்... வெயில் ஒரு பக்கம்.. இதுக்கு நடுவுல லேசான மழை எங்கெல்லாம் வரப்போகுது தெரியுமா..? 

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடிய காற்றின் சுழற்சி காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் மற்றபடி தமிழகம், புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி கோவை உள்ளிட்ட தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் தூத்துக்குடி ராமநாதபுரம் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரையில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

click me!