
மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்...!
மேஷம் ராசி நேயர்களே..!
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போக வேண்டிய நாள். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறைந்த விடும். சகோதரர் வகையில் சில பிரச்சினைகள் வரும். திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.
ரிஷப ராசி நேயர்களே..!
பெரியோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும் பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். உங்களின் நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். தேவையான பண வரவு உண்டு.
கடக ராசி நேயர்களே...!
கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் நாள் இது. கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை ஆபரணங்களை வாங்கும் நாள் இது.
மிதுன ராசி நேயர்களே..!
பிள்ளைகளால் பெருமை அடையும் நாள் இது. புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு கூடுதலாகும். பல பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்ம ராசி நேயர்களே...!
உங்களுக்கு கிடைக்கும் பணவரவு போதுமானதாக இருக்காது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லையே என்ற மனக்கவலை வந்து போகும். விருந்தினர் உங்கள் வீட்டிற்கு இன்று வரலாம்.
கன்னி ராசி நேயர்களே..!
மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும் சொத்து தொடர்பான பல சிக்கலிலிருந்து மீண்டு வருவீர்கள் வீடு வாகன பராமரிப்பு மேற்கொள்வீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.