
மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!
மேஷ ராசி நேயர்களே..!
உடன்பிறப்புகளின் உதவி உங்களுக்கு வந்து கிடைக்கும் நாள் இது. அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்... வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் நல்ல உயர்வு காண வாய்ப்பு உண்டு.
ரிஷப ராசி நேயர்களே..!
உங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும் நாள். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்த தடை அகலும். வியாபார போட்டிகளை சமாளித்து நடக்கக்கூடிய நாள் இது. உடன்பிறப்புகள் மூலம் நல்ல சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி நேயர்களே...!
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். தொழிலில் இருந்து வந்த விரக்தி நீங்கும்.
கடக ராசி நேயர்களே..!
பயணங்களால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்ம ராசி நேயர்களே..!
இன்று உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வெளிவட்டார பழக்கத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். வீடு இடமாற்றம் நடைபெறும். பயணங்களில் அதிக கவனம் தேவை.
கன்னி ராசி நேயர்களே...!
கலகலப்பான செய்தி உங்களை வந்து சேரும். கண்ணும் கருத்துமாக வேலை செய்கிறீர்கள். உங்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.