"Me too" விற்கு எதிராக உருவானது "மென் டூ"..! இனி வெளிவரும் பெண்களின் லீலைகள் என்னவோ...!?

By ezhil mozhiFirst Published May 9, 2019, 4:04 PM IST
Highlights

ஆண்களை பழி தீர்ப்பதற்காக பெண்கள் எடுத்துக்கொள்ளும் மிகப்பெரிய ஆயுதம் "Me too" என  எனக்கூறி, இதற்கு எதிராக ஆண்களின் நலன் காக்க "மென் டூ " என்ற இயக்கத்தை பிரபல நடிகரின் நண்பர்கள் துவக்கி உள்ளனர்.
 

"Me too" விற்கு எதிராக உருவானது "மென் டூ"..! இனி வெளிவரும் பெண்களின் லீலைகள் என்னவோ...!? 

ஆண்களை பழி தீர்ப்பதற்காக பெண்கள் எடுத்துக்கொள்ளும் மிகப்பெரிய ஆயுதம் "Me too"என எனக்கூறி, இதற்கு எதிராக ஆண்களின் நலன் காக்க "மென் டூ " என்ற இயக்கத்தை பிரபல நடிகரின் நண்பர்கள் துவக்கி உள்ளனர்.

கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என அனைத்திலுமே "Me too" பிரபலம் அடைந்து உள்ளது. கோலிவுட்டில் 2006 ஆம் ஆண்டே உருவான ஒரு விஷயம் "Me too". இதனை தரானா புர்க் என்ற மனித உரிமை ஆர்வலர் தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் இதன் மூலம் வெளிக் கொண்டு வரப்படுகின்றன. மிகவும் பிரபலமான பாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி மீது 80க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். பின்னர் அவரது அட்டூழியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். 

பாலிவுட் நடிகையான அலிசா மிலானே இவரும்,பல ஆண்களை பற்றி மீ டூவில் பதிவிட்டு வந்தார். இதற்கு பிறகு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும் Me too மிகவும் பிரபலமாகி ஆங்காங்கு இது போன்ற முக்கிய பாலியல் ஜாம்பவான்களை பற்றின விவரங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

தற்போது கோலிவுட்டில் அரசியல்வாதிகள் முதல் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் வரை தாங்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தைரியமாக Me too இயக்கத்தின் மூலம் தெரிவிக்க முன்வருகின்றனர்.

உதாரணமாக நடிகை ஸ்ரீரெட்டி கோலிவுட் பாலிவுட் நடிகர்களை தோலுரித்துக் கட்டினார். இதற்கிடையில் நடிகர் கரண் ஓபராய் மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு அவரது நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர் சந்திப்பின் போது சில முக்கிய விஷயத்தை தெரிவித்தனர். சமீபகாலமாக ஆண்களுக்கு எதிராக போலி பாலியல் குற்ற வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் இதிலிருந்து ஆண்களை காப்பாற்றிக்கொள்ள வழக்கிலிருந்தும் மீண்டு வர மென் டூ இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று  போலியான குற்றச்சாட்டை முன்வைத்த பெண்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் Men too இயக்கத்தை நடிகர் கரண் ஓபராயின் நண்பர்கள் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சில விவரங்களை வெளியிடலாம் என தெரிகிறது. 

click me!