நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் மாட்டு பொங்கல்..!

By manimegalai aFirst Published Dec 26, 2019, 7:01 PM IST
Highlights

மனிதனின் வாழ்வில் மாடு என்கிற ஜீவன் பிரிக்க முடியாத ஒன்று. காரணம் காலை எழுந்ததும், பலரும் தன்னுடைய முதல் புத்துணர்வு பானமாக எடுத்து கொள்வது, பசும் பால் சேர்த்த, டீ, காபி, போன்றவை தான். தாய் பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு, தாய் ஆவதும் பசு மாடுகள் தான். 
 

மனிதனின் வாழ்வில் மாடு என்கிற ஜீவன் பிரிக்க முடியாத ஒன்று. காரணம் காலை எழுந்ததும், பலரும் தன்னுடைய முதல் புத்துணர்வு பானமாக எடுத்து கொள்வது, பசும் பால் சேர்த்த, டீ, காபி, போன்றவை தான். தாய் பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு, தாய் ஆவதும் பசு மாடுகள் தான். 

அதே போல் மாடுகள் சேத்தில் கால் வைத்து உழவு செய்தால் தான், நாம் சோற்றில் கூட கை வைக்க முடியும். எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் நம்மை ஒவ்வொரு நாளும் வாழ வைத்து வரும் மாடுகளுக்கு நன்றி கூறும் விதமாக தான் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டு பொங்கல் சிறப்பு:

மாட்டு பொங்கல் அன்று, மாடுகள் வளர்க்கப்படும் தொழுவதை நன்கு சுத்தம் செய்து, மாடுகளுக்கு கொம்பு சீவி, அதில் பளபளக்கும் வண்ண வண்ண பெயிண்ட் அடித்து, குளிக்க வைத்து, மஞ்சள் - குங்குமம் வைத்து, மூக்கணா கயிறு, சலங்கை வைத்த கழுத்து பட்டி, போன்றவை புதிதாக பூட்டி, அலங்காரம் செய்து மாலை மரியாதை கொடுத்து, மாடுகளுக்காக, தொழுவத்தில் பொங்கல் வைத்து, அதனை மாடுகளுக்கு படைத்தது, ஊட்டி விடுவார்கள். 

மாடுகளுக்கு மற்றும் இன்று, ஆடுகளுக்கும் பழம், பொங்கல் ஆகியற்றை ஊட்டி, அவற்றின் மகிழ்ச்சியை கண்டு ரசிப்பார்கள் தமிழ் மக்கள்.

மேலும் ரேக்ளா ரேஸ், மாடு பிடி பந்தயம், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளும் மாடுகளுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு வைக்கப்பட்டு, பல்வேறு பரிசுகளும் கொடுக்கப்படுகிறது.

தமிழக மக்களால், மஹாலக்ஷ்மியாக பார்க்கப்படும் மாடு, பலரது வீட்டிலும் ஒரு விலங்காக பார்க்கப்படுவது இல்லை. அவர்களுடைய பிள்ளைகள், மற்றும் உறவு முறைகளாகவே பார்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மாடு மற்றும் ஆடுகளுக்கு, லட்சுமி, கறுப்பி, பொன்னி என பல்வேறு பெயர்களை வைத்து உணர்வு பூர்வமான அன்போடு அழைத்து வருகின்றனர் தமிழர்கள் என்றால் அது மறுக்க முடியாதது.

click me!