முதன் முறையாக மதுரை மீனாட்சிக்கும்,சித்திரை திருவிழாவிற்கும் வந்த சோதனை.!! திருக்கல்யாணத்தை இணையத்தில் பார்க்க

By Thiraviaraj RMFirst Published Apr 17, 2020, 9:17 PM IST
Highlights

மதுரையில் சித்திரை திருவிழா மதுரைக்கு மட்டுமல்ல உலத்திற்கே பண்பாட்டின் அடையாளம் அது. சித்திரை திருவிழா இந்த நூற்றாண்டில் என்றுமே நிறுத்தப்பட்டது இல்லை. ஆனால் கொரோனா இந்தாண்டு சித்திரை திருவிழாவை நிறுத்தியிருக்கிறது. இதனால் மதுரை மக்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்கள்.மக்கள் வெள்ளத்தில்  மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. முதன்முறையாக இணையதளத்தில் மக்கள் இந்தாண்டு காண இருக்கிறார்கள்.

T.Balamurukan

சித்திரை திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மே 4-ம் தேதி காலை 9.05 முதல் 9.23 மணிக்குள் திருக்கல்யாணம் நடத்தப்படும். உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி 4 சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பர்கள். சித்திரை திருவிழாவின் போது கொடியேற்றம், தேரோட்டம், திருவீதியுலா ஆகியவை நடைபெறாது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த சித்திரை திருவிழா என்பது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் அதனை தொடர்ந்து வருகின்ற வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகின்ற காட்சி உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசிப்பார்கள்.

இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் மே 7ஆம் தேதி கள்ளழகர் வைகையில் இறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு, தற்போது மே 3ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சித்திரை திருவிழா தொடர்பாக மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர்,  அர்ச்சகர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் மீனாட்சி கோவிலில் திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் மே 4 ல் சேத்தி மண்டபத்தில் நடைபெறும்.  

4 சிவாச்சாரியார்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி திருக்கல்யாண நிகழ்வை நடத்தி வைப்பர். WWW.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்படும். திருமணமான பெண்கள் தங்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்து புதிதாக மங்கல நாண் அணியும் மரபை பின்பற்றலாம்.  மே 4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் புதிய மங்கல நாண் மாற்றிக்கொள்ள உகந்த நேரம்” என்று கோவில் நிர்வாகம் 

click me!