லாக்டவுன் மத்தியில், இருநாட்டு காதலர்களுக்காக திறக்கப்பட்ட நீதிமன்றம்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 17, 2020, 8:22 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, மெக்ஸிகோ பெண்ணின் திருமணத்திற்காக இரவில் நீதிமன்றம் திறக்கப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

T.Balamurukan

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, மெக்ஸிகோ பெண்ணின் திருமணத்திற்காக இரவில் நீதிமன்றம் திறக்கப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம். ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன் காஷ்யப். மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பெண் டானா ஜோஹரி ஓலிவெராஸ் என்ற பெண்ணுடன் மொழிகற்கும் செல்போன்ஆப் மூலம் நிரஞ்சனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த பிப்ரவரி 17ம்தேதி இருவரும் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக மெக்ஸிகோவிலிருந்து பிப்ரவரி 11ம்தேதி டானாஜோஹரி இந்தியா வந்துள்ளார்.
 மார்ச் 18ம்தேதி இவர்களது திருமணம் நடக்கவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினையால் திருமணம் தள்ளிப்போனது. இதனால் மாவட்ட ஆட்சியரை நிரஞ்சன், டானா ஆகியோர் சந்தித்து மனு அளித்து திருமணம் செய்ய அனுமதியைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து நிரஞ்சன் கூறுகையில், "எனது தோழி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சிறப்பு திருமணச் சட்டம் மூலம் மட்டுமே நான் அவரை திருமணம் செய்ய முடியும் என்பதை அறிந்தேன். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அவரிடம் அனுமதி பெற்று பின்பு ரோடக் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருமணத்தை நடத்த அனுமதி கிடைத்தது.இதைத் தொடர்ந்து ஏப்ரல் 13ம்தேதி இரவு 8 மணிக்கு ரோடக் நீதிமன்றம் திறக்கப்பட்டு எங்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

click me!