கொரோனாவுக்கு அடுத்த பிரச்னையாக வெட்டுக்கிளி படையெடுப்பு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வெட்டுக்கிளியை வைத்துச் சமையல் தொடங்கி விட்டார்கள். வெட்டுக்கிளி ப்ரியாணி, லோகஸ்ட் 65 என களைகட்டுகிறது விற்பனை.
கொரோனாவுக்கு அடுத்த பிரச்னையாக வெட்டுக்கிளி படையெடுப்பு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வெட்டுக்கிளியை வைத்துச் சமையல் தொடங்கி விட்டார்கள். வெட்டுக்கிளி ப்ரியாணி, லோகஸ்ட் 65 என களைகட்டுகிறது விற்பனை.
வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க அரசு பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை ஜோராக நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளிகள் கோடிக் கணக்கில் உருவாகி விவசாயப் பயிர்களை நாசமாக்கி வருகின்றன. வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் முயற்சிகளை அரசுகள் முன்னெடுத்துள்ள சூழலில் ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
undefined
இந்த சமையல் முறை குறித்து தனியார் உணவகத்தை நடத்துபவர் கூறுகையில், "வெட்டுக்கிளியைச் சமைப்பதற்கு முன் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக அதன், கால், இறக்கைகளை நீக்கிவிட வேண்டும்" என்கிறார். விவசாயப் பயிர்களுக்கு பெரும் சவாலாகவும் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தையும் ஏற்படுத்திவிடும் வெட்டுக்கிளிகள் குறித்து ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் புதிய வகை வெட்டுக் கிளிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் காந்தல், புல்பள்ளி பகுதியில், புதிய வகை வெட்டுக்கிளி ஒன்றை கடைக்காரர்களும், விவசாயிகளும் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்களுக்கு அச்சம் எழுந்துள்ளது.
உலக நாடுகளில் வெட்டுக்கிளிகள் புரதச்சத்து நிறைந்திருப்பதால் உணவாக உட்கொள்வர். மெக்சிகோவிலும், சீனாவில் அதிகம் வெட்டுக்கிளிகள் உணவுக்கு பயன்படுகிறது. இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, 27 ஆண்டுக்குப் பின் 2019 ல் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட பாலைவன வெட்டுக்கிளிகள் ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்து குஜராத், இராஜஸ்தானில் 2019 பிற்பகுதியில் பரவல் தொடங்கி டிசம்பர் மாதத்தில் குஜராத்தில் 17,000 ஹெக்டேர் பரப்பளவில் சீரகப் பயிர்களை அழித்து மேற்கு இராஜஸ்தானின் பகுதிகளில் 3,50,000 ஹெக்டேர் பரப்பளவிலிருந்த பயிர்களை அழித்தன.
மே மாதத்தில் இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வெட்டுக்கிளிக் கூட்டமாகவந்து மோசமாக பாதிப்பான. இத்திரள்கள் ஒரு கிலோ மீட்டர் அகலம் உடையதாக இருந்தன. இது கடந்த 27 ஆண்டுகளில் நடந்த வெட்டுக்கிளித் தாக்குதல்களில் மிக மிக மோசமானதாகும். விவசாயிகள் பாதிப்பு ஒருபக்கம் என்றால் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி ராஜஸ்தானில் நல்ல வியாபாரம் ஆகி வருகிறது. சிக்கனைவிட வெட்டுக்கிளி புரதச் சத்து நிறைந்தது. ருசியானது என்கிறார்கள் சமையல்கலை வல்லுநர்கள்.