ஜூன் 24 வரை ஊரடங்கு? கிடைத்த ஆதாரத்தால் குழப்பம்..! பேரதிர்ச்சியில் மக்கள் ..!

By ezhil mozhiFirst Published Apr 18, 2020, 2:13 PM IST
Highlights

அதாவது அந்த அட்டையை வெளியே வரும்போது மக்கள் போலீசாரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் வாரத்தில் இரண்டு முறை மட்டுமே அவ்வாறு வெளியே வர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவில் தற்போது வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது . இதற்கு முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு  முடிய இருந்த நிலையில்,கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டித்து,மே  3 வரையில் மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒரு நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில தொழில் நிறுவனங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி கொடுத்து உள்ளது. இதன் காரணமாக மெல்ல மெல்ல ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருச்சியில் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிவதை தடுக்க பச்சை ஊதா மஞ்சள் ஆகிய மூன்று கலரில் அட்டைகள் தயார் செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

அதாவது அந்த அட்டையை வெளியே வரும்போது மக்கள் போலீசாரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் வாரத்தில் இரண்டு முறை மட்டுமே அவ்வாறு வெளியே வர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அட்டையில் செல்லுபடியாகும் காலம் வரும் ஜூன் 24-ஆம் தேதி வரை என்று அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோமரசம்பேட்டை போலீசார் வழங்கியுள்ள இந்த அட்டையில்  குறிப்பிடப்பட்டுள்ள தேதியால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவுகிறதாம்.

ஏற்கனவே எப்போதுதான் வெளியே போகப் போகிறோமோ? இயல்பு நிலை எப்போது திரும்பும் என மக்கள் ஏங்கி இருக்கும் இந்த ஒரு தருணத்தில் அவர்களுக்கு இது மேலும் பேரதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக உள்ளது இந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி.

இது ஒருபக்கம் இருக்க..கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களை ரெட் ஸ்பாட் என அறிவித்து பல்வேறு கெடுபிடிகளை விதித்து உள்ளது அரசு. கொரோனாவை பொறுத்தவரையில் மெல்ல மெல்ல குறைய  தொடங்கினால் தான், மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். அதிலும் குறிப்பாக மக்களின் முழு  ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா நோயிலிருந்து விடுபட முடியும் என்பதையும் நாம் கருத்தில்  கொள்ள வேண்டும்.

எனவே கொரோனா பாதிப்பு பொறுத்தே ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பதை தீர்மானிக்க முடியும்
 

click me!