ஊரடங்கு காலத்தில் என்ன செய்யலாம்... செய்யக்கூடாது... மத்திய அரசின் விதிமுறைகள்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 1, 2020, 8:44 PM IST
Highlights

அதன் படி அனைத்து மண்டலங்களிலும் தேவையில்லாமல் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் முதல் 6 வயது சிறுவர்கள் வரை வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கை மத்திய அரசு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த 2 வாரங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது எவை எல்லாம் இயங்கும் என்பது பற்றி பார்க்கலாம்... 

தற்போது கொரோனா தொற்று காரணமாக அதன் பரவலுக்கு ஏற்றவாறு சிவப்பு, ஆரஞ்சு, இளம் ஆரஞ்சு, பச்சை ஆகிய நான்கு வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து மண்டலங்களிலும் தேவையில்லாமல் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் முதல் 6 வயது சிறுவர்கள் வரை வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

எவற்றுக்கெல்லாம் அனுமதி... 

அனைத்து விவசாய பணிகளையும் மேற்கொள்ளலாம்

நாடு முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தை தொடர தடையில்லை

தனியார் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்

நாடு முழுவதும் சரக்கு வாகனங்கள் தடையின்றி இயக்கலாம்

காரில் ஓட்டுனர் உட்பட இரண்டு பேரும், பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லலாம். 

சிவப்பு மண்டலத்தில் ஐ.டி.நிறுவனங்கள் இயங்க அனுமதி

ஆரஞ்சு மண்டலத்தில் காரில் டிரைவருடன் இரண்டு பேர் பயணிக்கலாம் . அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்கு மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும். 

 

எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை... 


சிவப்பு மண்டலத்தில் பேருந்துகள், சலூன், அழகு நிலையங்கள் இயக்க தடை விதிப்பு

ஆட்டோ, கார் போக்குவரத்திற்கு தடை தொடரும் 

விமானம், ரயில், கல்வி நிலையங்கள், மெட்ரோ ரயில் ஆகியவை இயக்க தடை விதிப்பு 

சிவப்பு மண்டலத்தில் இருந்து இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை கட்டாயம் யாரும் வெளியே வரக்கூடாது. 

 

பச்சை மண்டலத்தில்

பச்சை மண்டலத்தில் டாஸ்மாக், பெட்டி கடைகளை திறக்க அனுமதி. அதேபோல் 50 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பேருந்துகளை இயக்கலாம்

குடியிருப்பை ஒட்டியுள்ள கடைகளை திறக்கலாம். கட்டுமான இடத்தில் தங்கியுள்ள பணியாளர்களை கொண்டு நகர்புறங்களில் கட்டுமான பணிகளை தொடங்கலாம் 

தடைக்காலம் இல்லாத ஏரி, கடல் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதி

click me!