Lata Mangeshkar: ஆராரோ ஆராரோ என தாலாட்டுப் பாடியவர், எங்கிருந்தோ அழைக்கும் குரலாகி காற்றில் கரைந்திருக்கிறார்

By Anu Kan  |  First Published Feb 6, 2022, 11:38 AM IST

இந்தியாவின் 'இசைக்குயில் ’ என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.


லதா மங்கேஷ்கர், தமிழில் பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்தில் இளையராஜா இசையில், ‘ஆராரோ ஆராரோ’ பாடல் மற்றும் இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வளையோசை’பாடல்களை பாடி புகழ் பெற்றவர். இதை தவிர்த்து இவர் ஏராளமான தமிழ் பாடல்களை பாடியவர்.  

இந்தியாவின் 'இசைக்குயில் ’ என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பால் லதா மங்கேஷ்கர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலையில் உடனடியாக முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துவிட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்தியாவின் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார். இவர் 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி லதா மங்கேஷ்கர் (92). இவரது சகோதரி ஆஷா போஸ்லேவும் புகழ்பெற்ற பின்னணி பாடகர். பல்வேறு உயரிய விருதுகளைப்  பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது 

click me!