உஷார் மக்களே..! 4 மணிக்கு ஆயிட்டா வீட்டுக்கு போய்டுங்க...!

Published : Aug 16, 2019, 12:45 PM IST
உஷார் மக்களே..!  4  மணிக்கு ஆயிட்டா வீட்டுக்கு போய்டுங்க...!

சுருக்கம்

கடந்த 46 நாட்களில் இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர். 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக அற்புத நிகழ்வான அத்தி வரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 46 நாட்களில் இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர். நிறைவு நாளான இன்று அத்தி வரதரை காண்பதற்காக தொடர்ந்து 6 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் பக்தர்கள்.

இது ஒரு பக்கம் இருக்க.. மற்றொரு பக்கம் இன்று மாலை 4 மணிக்கு மேல் கோவில் வளாகத்திற்குள் இருப்பவர்களை மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் அதாவது 4 மணி அளவில் கோவிலுக்கு வெளியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களால் அத்தி வரதரை தரிசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகம விதிப்படி 48 ஆவது நாளான நாளை அத்தி வரதரை அமிர்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக ஒரு சில சிறப்பு பூஜைகள் செய்து அத்தி வரதரை குளத்தில் வைக்கப்படுவார். மீண்டும் அத்தி வரதர் வைபவம் 40 ஆண்டு கழித்து 2059 ஆம் ஆண்டு நடைபெ.றும் என்பது குறிப்பிடத்தக்கது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்