உங்கள் சமையலறை கிருமி நீக்கம் செய்து... சுத்தமாக வைத்திருப்பது எப்படி? மூன்று எளிய டிப்ஸ் இதோ!

By manimegalai aFirst Published Jan 17, 2022, 12:08 PM IST
Highlights

சமையலறை பகுதிகளை கிருமி நீக்கம் செய்து சுத்தமாக வைத்திருக்க 3 உதவி குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சமையல் அறைதான் நம் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் இடமாகும். மற்ற இடங்களை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். ஆனால், சமையல் அறையை சுத்தம் செய்வது, ஒவ்வொரு நாளும் கடினமான ஒன்றாகும். தற்போது, உள்ள கரோனா காலகட்டத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள நோய் கிருமிகளை நீக்கம் செய்வது அவசியம். வெளி இடங்களை தவிர்த்து, வீட்டில் பெரும்பாலான நோய் கிருமிகள் சுத்தம் இல்லாத சமையல் அறை மூலம் நமக்கு ஏற்படும் அபாயம் இருக்கிறது.  

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. தூய்மையான இடத்தில் சமைக்கப்படும் உணவு நமக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அளிக்கும். தூய்மையான சமையலறையில் சமையல் செய்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவும். எனவே, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், உங்கள் சமையலறை பகுதியை சுத்தமாகவும், கிருமி நீக்கம் செய்யாமல் வைத்திருக்க சில குறிப்புகளை வழங்குகிறது. 

உணவு மாசுபடுவதைத் தடுக்க வீட்டிலுள்ள மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்து சுத்தமாக வைத்திருப்பது முக்கியமானது. அதேபோன்று, உங்கள் பாத்திரங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து அவற்றை உடனுடனே சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். முதலில் உங்கள் சமையலறையில் எந்த இடம் ஒழுங்கற்று இருக்கின்றது என்பதை கண்டறிந்து அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்து விடவேண்டும்.

சமையலறை பகுதிகளை கிருமி நீக்கம் செய்து சுத்தமாக வைத்திருக்க 3 உதவி குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சமையலறை கவுண்டர்கள் மற்றும் ஸ்லாப்களில் நாம் அனைத்து உணவுகளையும் தயார் செய்து வைக்கிறோம். இதில் காலப்போக்கில் தூசி அல்லது அழுக்கு சேரக்கூடும். அதனால்தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் படி, தினமும் ஒரு முறையாவது தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சமையலறை கவுண்டர்கள் மற்றும் ஸ்லாப்கள் மற்றும் அடுப்பை நன்கு கழுவுவது முக்கியம்.

சாப்பாடு தயாரித்தவுடன், சமையல் அறையை மட்டுமல்ல, ஒவ்வொரு உணவையும் தயாரித்த பிறகு கேஸ் அடுப்பையும் சுத்தம் செய்வது நல்லது. இது கிருமிகள் அல்லது நோய்த்தொற்றுகள் பரவும் அபாயத்தைக் குறைத்து, எல்லா நேரங்களிலும் நல்ல தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க உதவும். மற்றொரு முக்கியமான அம்சம் நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்ய பரிந்துரைக்கிறது.

வீட்டில் தயாரித்த ஆல்கஹால் கிளீனர்களை பயன்படுத்தி உங்கள் கிரானைட் மேடைகளை சுத்தமாக்கலாம். எலுமிச்சை அல்லது வினிகர் போன்றவை உங்கள் கிரானைட் கற்களின் பளபளப்பை போக்கச்செய்துவிடும். சமையலறையை சுத்தம் செய்வதற்கு வினிகரை பயன்படுத்தலாம். இது தரையில் உள்ள அழுக்கை போக்குவதற்கு உகந்ததாகும்.

அதேபோன்று, பேக்கிங் சோடா சமையலறையை சுத்தம் செய்ய உதவும் இன்றியமையாத பொருட்களில் ஒன்றாகும். ஹைட்ரஜன் பெராக்சைடுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை தெளித்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் சுத்தம் செய்ய வேண்டும். இது சமையலறையை பளிச்சென்று மாற்றுவதற்கான வழிகளில் ஒன்றாகும்.

இந்த உதவிக்குறிப்புகள் நீண்ட காலத்திற்கு உதவிகரமாக இருக்கும் மற்றும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் போதுமான உணவுப் பாதுகாப்பைப் பராமரிக்கவும் உதவும்.
 
 

click me!