பொடுகை விரட்ட செயற்கை மருந்து தேவையா? வீட்டில் இருக்கும் 7 அற்புத இயற்கை வழிகள்!

By manimegalai aFirst Published Jan 17, 2022, 10:10 AM IST
Highlights

பொடுகு பிரச்சனைக்கு, வீட்டிலேயே இருக்கும் பொருள்களை வைத்து தீர்வுகாணும் 6 எளிய வழிமுறைகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இயற்கை அழகு நிறைந்த மரங்கள், செடிகள் என அனைத்தும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்கின்றன. அதுபோல் மனிதனும் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப தனது உணவு, உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், இந்த ஆண்டு நாம் அனைவரும் குளிர்காலத்தோடு, ஓமிக்கிரன் கொரோனாவையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வழக்கத்தை விட இந்த வருடம் குளிரின் அளவு அதிகமாக இருக்குமோ என்பதில் தொடங்கி, உடல் நல குறைபாடுகள் ஏற்படுமா என்பது வரையிலான சந்தேகங்கள் ஏராளம். எனவே, குளிர் காலத்திற்கு ஏற்ப மனிதன் தனது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் செய்யத்தக்க முக்கிய எளிய 7 வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 குளிர்கால சரும பிரச்னைகளில் முக்கியமான ஒன்று கூந்தல் உதிர்வதும், பொடுகு பிரச்சனையும், சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். இவைகளுக்கு வீட்டிலேயே இருக்கும் பொருள்களை வைத்து தீர்வுகாணும் 6 எளிய வழிமுறைகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வெந்தயம்

வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும்.  தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை நீங்கும்.

பாசிப்பயறு

பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊற வைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை 
நீங்கும்.

வேப்பிலை

வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால்  பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சை  பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம்  ஊறவைத்து, கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

கற்றாழை

கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

மருதாணி

வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து,  சிறிதுநேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர 
பொடுகு நீங்கும்.

தேங்காய் பால்:

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை  அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.

முட்டை:

முதல் நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு  குறையும்.  எனவே, அரிப்பு  நீங்கவும், பொடுகை போக்கவும் மேற்கூறிய இயற்கையான வழிமுறைகளை தெரிந்துகொள்வது நல்லது. எனவே, மேற்கூறிய வழிமுறைகள் பின்பற்றி, இயற்கையான முறையில் பொடுகை விரட்டுங்கள்.

 
 

click me!